Song Tags: Tamil Christmas Songs

Jillena Kulirkaatru – ஜில்லான குளிர் காற்று

Jillena Kulirkaatru
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார் -2

1. நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே -2

மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர் -2

2. மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
மா ஜோதி மானிடரானார்
உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
அவர் அன்பிற்கு இணையில்லையே -2

நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே -2

Jillaana Kulir Kaatru Veesum Neramathu
Meloga Thoothar Koottam Paadum Velaiyathu
Mannin Maantharum Katharum Neramathu
Nam Mesiyah Mannil Uthithaar – 2

1. Natchathiram Naduvaanil Oli Vilakkaai
Saasthirigal Pinthodarnthaare
Vellaipolam Thoobavarkkam Allichendre
Arpanithaar Avar Thiru Munne – 2

Manthai Meippargal Puthu Gaanam Paadiye
Vinthai Kaanave Virainthodi Sendranar – 2

2. Maanidarin Paavarogam Maattridave
Maa Jothi Maanidaraanaar
Unnai Meetka Thammai Paliyaaga Thantha
Avar Anbirku Inaiyillaiye – 2

Naasarethilor Nanmai Piranthathe
Nambinorkkellaam Athu Nanmai Alithathe – 2

Christmas Naalidhae – கிறிஸ்மஸ் நாளிதே

Christmas Naalidhae Ellorum Paadi Kondadi Magilum
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு

கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு

கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

Sthothiram Seivene – ஸ்தோத்திரம் செய்வேனே

Sthothiram Seivene

ஸ்தோத்திரம் செய்வேனே – இரட்சகனை (4)
பாத்திரமாக இம்மாத்ரம் கருணை வைத்த (2)
பார்த்திபனை யூத கோத்திரனை என்றும் (…ஸ்தோத்திரம் செய்வேனே)

1. அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்து கழுதவனை (3)
முன்னணை மீதுற்ற சின்ன குமாரனை (2)
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை (…ஸ்தோத்திரம் செய்வேனே)

2. கந்தை பொதிந்தவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை (3)
மந்தையர்கானந்த மாட்சியளிதோனை (2)
வான பரண் என்னும் ஞான குணவானை (…ஸ்தோத்திரம் செய்வேனே)

3. செம்பொன் னுருவானைத்
தேசிகர்கள் தேடும் குருவாணை (3)
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு (2)
அன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி (…ஸ்தோத்திரம் செய்வேனே)

Sthothiram Seyvene – Ratchakanai (4)
Paaththiramaaka Immaathram Karunai Vaiththa (2)
Paarththibanai Yutha Koththiranai Endrum (…Sthothiram Seyvene)

1. Annai Marisuthanai
Pulmeethu Amizhnthu Kazhuthavanai (3)
Munnanai Meethuttra Sinna Kumaaranai (2)
Munnurai Noorpadi Innilath thuttronai (…Sthothiram Seyvene)

2. Kanthai Pothinthavanai
Vaanorkalum Vanthadi Pannipavanai (3)
Manthaiyarkaanantha Maatchiyaliththonai (2)
Vaana Paran Ennum Njaana Kunavaanai (…Sthothiram Seyvene)

3. Sempon nuruvaanaith
Thesikarkal Thedum Kuruvaanai (3)
Ampara meviya Umbar Kanaththodu (2)
Anbu Pera Nindru Paim pon Malar Thuvi (…Sthothiram Seyvene)

Piranthar Piranthar – பிறந்தார் பிறந்தார் வானவர்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

Vaanam Vaalthatum – வானம் வாழ்த்தட்டும்

Vaanam Vaalthatum
வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்
பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்
பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2)
Merry (4) Christmas (4)

1. காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே
மேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே
குளிரும் பணியும் வாட்டிட
குளிரில் கோமகன் தூங்கிட
விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்
விண் பாலனோடு விளையாடவே
வா வா வா வானத்து வெண்ணிலவே – வானம்

2. ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே
ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே
அன்னை மரியின் மடியிலே
அன்பின் ரூபம் ஆனாரே
இனி மீட்க வந்த தேவ மைந்தனே
இனி பாடவைத்த இயேசு பாலனே
வா வா வா வாழ்த்து பாடுகிறேன்

Vaan Velli Pragaasikkudhae – வான் வெள்ளி பிரகாசிக்குதே

Vaan Velli Pragaasikkudhae
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே

1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் – வான்

2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்

Vaan Velli Pragaasikkudhae
Ulagil Oli Veesidumae
Yesupran Varum Velai
Manamae Magilvagidumae(2)

1. Pasum Pillanai Manjathilae
Siru Paalagan Thuyilgindraar
Avar Kannayarvaar Nammai Kandiduvaar
Nal Aasigal Kooriduvaar – Vaan

2. Igameedhinil Anbudanae
Inba Seidhiyai Kooriduvom
Magilvodu Dhinam
Pugazh Paadiduvom
Avar Paadham Panindhiduvom – Vaan