Aaviyanavare Aaviyanavare
ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே
அபிஷேகம் இன்று தாருமே
1. பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே – ஆவியானவரே
2. ஜனத்தின்மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே – ஆவியானவரே
3. நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்திலே ஜீவ நதி ஓடவே
பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்குமிடம் அசைய வேண்டுமே – ஆவியானவரே
4. அந்நிய பாஷைகளைப் பேசியே
மண்ணிலே சாட்சியாக வாழுவேன்
விண்ணிலே உம்மை நான் சந்திக்க
புண்ணியரே என்னையும் நிரப்புமே – ஆவியானவரே
5. வல்லமை வரங்கள் வேண்டுமே
சொல்லவும் வாக்கு வேண்டுமே
கள்ளங்கபடு மாற வேண்டுமே
உள்ளத்திலே தேவ அன்பு ஊற்றுமே – ஆவியானவரே
6. உள்ளத்திலே ஆறுதல் வேண்டுமே
வாழ்விலே மாறுதல் வேண்டுமே
ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மனையாகவே – ஆவியானவரே