Anbu Illa Ulaginilae
அன்பு இல்லா உலகினிலே
அன்பை காட்ட வந்தீரே
உண்மை இல்லா உலகினிலே
உண்மை சொல்ல வந்தீரே
என் மேல் அன்பு கூர்ந்ததால்
உம் உயிரை தந்தீரே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2
மழையை பார்த்தேன்
மேகத்தை பார்த்தேன்
உம் மகிமையை பார்க்க வேண்டுமே
வல்லமை பார்த்தேன்
உம் கரத்தை பார்த்தேன்
உம் சத்தத்தை கேட்க வேண்டுமே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2
வெறுமையாய் வந்தேன்
வெறுமையாய் போவேன்
என்னோடு எதுவும் வருவதில்லையே
உம்மோடு இருக்கணும்
உமக்காய் வாழணும்
என் உள்ளமெல்லாம் துடிக்குதைய்யா-2
ஆராதனை உமக்கு ஆராதனை -2