Andavar Yesuvin
ஆண்டவர் இயேசுவின்
அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி
1. இயேசென்று சொன்னாலே
யார் என்று கேட்டிடும்-2
எண்ணற்ற மாந்தர்க்கு
நற்செய்தி யார் சொல்லுவார்?
என்னை நான் தருகின்றேன்
ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
தேவன் அன்பினையே – நற்செய்தி
2. அறிந்தும் அறியாமல்
தெரிந்தும் தெரியாமல்-2
வாழும் மாந்தர்க்கு
சத்தியத்தை யார் சொல்வார்
உன்னையே தந்திடுவாய்
எழும்பி நீ புறப்படுவாய்
பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
அன்பை என்றும் சொல் – நற்செய்தி