Deva sabayeelae Devan Yellutharulenar
தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்
1. பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்
2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே
3. இராப்பகலாய் தம் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்
4. உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர்
5. சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே
6. ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்
Dear bro,
If you have the audio of this song, pls give me.
pauldjohnson87@gmail.com
https://lyrics.abbayesu.com/tamil/deva-sabayeelae-devan/