En Devanae En Rajanae
என் தேவனே என் ராஜனே
என் உள்ளம் தேற்றிடுமே – 2
நன்மை செய்யும் நல்லவர் நீரல்லவோ
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்
எனக்காக சிலுவையில் மரித்தீரையா
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்
வாழவைக்கும் தெய்வம் நீர்தானய்யா
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்
பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
பாவி என்னையும் நீதிமானாய் மாற்றினீரே
துதிக்கின்றேன் இயேசைய்யா 4
நன்மை செய்தீரே என் வாழ்விலே 4
வாழ்வு கொடுத்தீரே வாழ வைத்தீரே 4
தேற்றினீரே என் உள்ளத்தை
காளைதோறும் புதுகிருபை தருபவரே
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்
வாக்குதத்தம் செய்தவர் நீர்தானய்யா
வாக்குமாறாமல் நிறைவேற்றி முடிப்பவரே
உண்மையுள்ள தெய்வம் நீர்தானய்யா
கண்கலங்காமல் வழிநடத்தி சென்றிடுவீர்
என் தெய்வமே என் இயேசுவே
என் உள்ளம் தேற்றினீரே