Entha Neramum Eppothume – எந்த நேரமும் எப்போதுமே

Entha Neramum Eppothume
எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை

இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

1. இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே — எந்த

2. சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே
எந்தன் வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே — எந்த

3. சிறுமைப்பட்டோரின் நம்பிக்கை
ஒரு போதும் கெட்டுப் போகாதே
தம்மை தேடுவோரை காத்தர் கைவிடாரே
தேவன் நமக்கு அடைக்கலமே — எந்த

4. ஒவ்வொரு ஆண்டிலும் கர்த்தர்
எவ்வளவோ அற்புதம் செய்தார்
வருங்காலத்திலும் வருகை வரையும்
வாக்குத் தத்தம் தந்து நடத்துவார் — எந்த

5. குமரன் கோபம் கொள்ளாமலும்
வழியில் நாம் அழியாமலும்
அவர் பாதங்களை முத்தம் செய்திடுவோம்
அன்பர் இயேசுவை அண்டிக் கொள்ளுவோம் — எந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *