Enthan Meipare
எந்தன் மேய்ப்பரே
என்னை ஆண்டு நடத்துமே
நீர் நடத்தும் இடமெல்லாம்
பின் சென்றிடுவேன்
உம் சத்தம் கேட்கவே
செவிசாய்த்திடுவேனே
நீர் நடத்துமிடமெல்லாம் பின் செல்வேன்
பசுமையான மேய்ச்சலண்டை
அமர்ந்த தண்ணீர்கள்
என் மேய்ப்பர் என்னோடென்றும் தங்குவார்
தடைகள் மலையைப்போல நின்று
பள்ளத்தாக்குகள் நேர்ந்தாலும்
என் மேய்ப்பர் என்னை நடத்தி சென்றிடுவார்