Jeevan Thanthu Anbu Kurnthu
ஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என்
ஜீவனுள்ள நாள் வரை நன்றி – 2
இயேசுவே நன்றி – 4
1 . இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
இரட்சிப்பால் அலங்கரித்தீர் – 2
உம்பிள்ளையாய் மாற்றினீர்
உம்மோடு வைத்துக்கொண்டீர் – 2
2 . தேடிவந்த தெய்வம் நீரே – என்னை
தேற்றி நடத்துகிறீர் – 2
என்னைக் காக்கும் தெய்வம் நீரே
எனக்காக யாவையும் செய்வீர் – 2
3 . ஊழியம் செய்ய என்னை இன்னும்
உருவாக்கி மகிழ்கின்றீர் – 2
ஒருபோதும் கைவிட மாட்டீர்
ஒருநாளும் விலகிட மாட்டீர் – 2
4 . ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பி நடத்துகிறீர் – 2
வாக்குத்தத்தம் செய்தவரே
வாக்கு மாறா வல்ல நேசரே – 2