கர்த்தர் கிருபை என்றுமுள்ளது
என்றென்றும் மாறாதது
ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை
ஆண்டு நடத்திடுதே
கர்த்தர் நல்லவர்
நம் தேவன் பெரியவர்
பெரியவர், பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர் உண்மையுள்ளவர்
1. கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
கரத்தைப் பிடித்து நடத்தினாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
தோளில் சுமந்து நடத்தினாரே
2. வியாதி படுக்கை மரண நேரம்
பெலனற்ற வேளையில் தாங்கினாரே
விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே
3. சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே
வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
தைரியப்படுத்தி நடத்தினாரே
4. கண்ணீர் கவலையாவையும் போக்க
கர்த்தர் இயேசு வருகின்றாரே
கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம்
அவரோடு நாமும் பறந்து செல்வோம்