Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar – கர்த்தரை துதியுங்கள்

Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar
கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
1. ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2
2. பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்
3. செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்
4. தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்

2 thoughts on “Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar – கர்த்தரை துதியுங்கள்

  1. paavi naan kirubai tharum lyrics

    பாவி நான் கிருபை காட்டும்
    மண்டும் ஓர் தருணம் தாரும்
    சுயத்தை முற்றும் வெறுத்துவிட்டு
    உண்மையாய் உந்தன் வழிநடக்க

    1.
    பாதை தோறும் வேதம் ஏந்தி
    பரிசுத்தன் என்று காட்டுகின்றேன்
    வேதம் காட்டும் பாதை செல்ல
    உள்ளமே இன்றி வாழ்கின்றேன் – பாவி

    2.
    கள்ளர் அடித்து மடியும் மனிதன்
    பாதை ஓரம் கிடக்கும்போது
    என்னைக் காத்தால் போதும் என்று
    ஒதுங்கி ஒதுங்கி ஓடுகின்றேன் – பாவி

    3.
    ஆயிரம் ஆயிரம் ஜாதிகள் வாழும்
    இந்திய தேசம் மட்பைக் காண
    நித்தம் உந்தன் சத்தம் கேட்டும்
    பித்தன் போல வாழ்ந்துவிட்டேன் – பாவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *