Kartharin Satham Vallamai Ulladhu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

Kartharin Satham Vallamai Ulladhu
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

சரணங்கள்
பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்

1. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின்

2. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின்

3. பெண்மான்கள் ஈனும்படி
பெலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதான மீந்து
பரண் எம்மை ஆசீர்வதிப்பார் – கர்த்தரின்

One thought on “Kartharin Satham Vallamai Ulladhu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *