Maatridum Ennai Maatridum
மாற்றிடும் என்னை மாற்றிடும்
உமக்கு உகந்த பாத்திரமாக
1. என்னை நானே இது வரை ஆளுகை செய்தது போதுமையா
என் ஆவி, ஆத்மா, சரீரம் யாவும் உமக்கு சொந்தமையா
என் ஆவி, ஆத்மா, சரீரம் யாவையும் நீரே ஆளுமையா
ஆட்கொள்ளும் என்னை ஆட்கொள்ளும்
உமக்கு உகந்த பாத்திரமாக
2. கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரரே உம்மை துதித்திடுவேன்
உம் மகிமைக்குரிய பாத்திரமாக என்னை வனைந்திடுமே
வனைந்திடும் என்னை வனைந்திடும்
உமக்கு உகந்த பாத்திரமாக
3. உம்மாலன்றி என்னால் எதுவும் செய்ய முடியாதையா
உம் வல்லமை வரங்கள் தந்து என்னை பயன்படுத்துமையா
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
உமக்கு உகந்த பாத்திரமாக
Lyrics and Sung by : Dr. S. Justin Samuel