Manavalan Munbathaga
மணவாளன் முன்பதாக செல்லும் போது
மணவாட்டி பின்பதாக செல்கிறாள்
என் நேசரே உம் பின்பாக நான்
என் ரூபாவதி உன் முன்பாக நான்
உம்மோடு இணைந்து செயல்படுவேன்
உம்மிலே எந்நாளும் கனி கொடுப்பேன்
கனிதரும் திராட்சை கொடி
என் திராட்சை செடி மேல்
படந்திருப்பேன்
அவர் கொடுக்கும் அன்பான
ருசியுள்ள பழம் போல்
என்றும் கனி கொடுப்பேன் நான்
உம்மில் கனி கொடுப்பேன்
என் மணவாளன் வருகையை காணும்போது
அந்த இனிமையான தருணத்தை பார்க்கும் போது
என் மனதின் கண்களாலே
காணும் போது
அந்த மகிமையின் பிரசன்னத்தை பார்க்கும் போது
பரிசுத்தமாகிடுவேன் நான் பரலோகம் சென்றிடுவேன்
சீக்கிரமாய் வரப்போகும் வானராஜானே
உம் வருகைக்காய் ஆவலுடன் காத்திருப்பேனே
அந்த இன்பாமான நாட்களுக்காய்
துன்பம் சகிக்கிறேன்
உம் துரிதமான வருகைகாய்
தினமும் ஏங்குறேன்
எப்போழுது வருவீராய்யா
என்னை உம்மோடு சேர்பீரய்யா