Nee Yaaraga Inthalum Paravaillai
நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல
உன் சூழ்நிலை எதுவானாலும் பரவாயில்ல
காப்பார் காப்பார் உன்னைக் காப்பார்
பாதுகாப்பார் எப்போதுமே } – 2
1. நீ ஆபத்தில் இருந்தாலும் பரவாயில்ல
நீ தோல்வியில் இருந்தாலும் பரவாயில்ல
பார்ப்பார் பார்ப்பார் உன்னைப் பார்ப்பார்
உள்ளங்கையில் வரைந்து பார்ப்பார்
2. நீ நினைத்தது நடக்கலையா பரவாயில்ல
நீ எதிர்பார்த்தது கிடைக்கலையா பரவாயில்ல
நன்மை நன்மை எல்லாம் நன்மை
நடந்தது எல்லாம் என்றும் நன்மை