Paavi Naan Kirubai Tharum
பாவி நான் கிருபை காட்டும்
மண்டும் ஓர் தருணம் தாரும்
சுயத்தை முற்றும் வெறுத்துவிட்டு
உண்மையாய் உந்தன் வழிநடக்க
1. பாதை தோறும் வேதம் ஏந்தி
பரிசுத்தன் என்று காட்டுகின்றேன்
வேதம் காட்டும் பாதை செல்ல
உள்ளமே இன்றி வாழ்கின்றேன் – பாவி
2. கள்ளர் அடித்து மடியும் மனிதன்
பாதை ஓரம் கிடக்கும்போது
என்னைக் காத்தால் போதும் என்று
ஒதுங்கி ஒதுங்கி ஓடுகின்றேன் – பாவி
3. ஆயிரம் ஆயிரம் ஜாதிகள் வாழும்
இந்திய தேசம் மட்பைக் காண
நித்தம் உந்தன் சத்தம் கேட்டும்
பித்தன் போல வாழ்ந்துவிட்டேன் – பாவி