Povas Povas
போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா
1. உந்தன் அடிமை நான் ஐயா-என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா
2. நிறைவான பரிசுத நீர்தானையா – உம்
நிழல் தானே தங்கும் சொர்க்கமையா
3. வேதனையோ வேறு சோதனையோ
எதுவும் என்னை பிரிக்காதையா
4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை
5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்
6. போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா
7. திருப்தியாக்கும் என் திரு உணவே
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
Super spiritual blessings I like it always