Rajathi Rajave
ராஜாதி ராஜாவே
கர்த்தாதி கர்த்தாவே
அழகில் சிறந்தவரே
ஆராதனை செய்கிறோம்
துதிக்கு பாத்திரரே
கிருபை நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை
வெண் அங்கி தரித்தவரே
வெண்மை ஆனவரே
ஆராதனை ஆராதனை
பரலோகம் திறந்தவரே
பாதாளம் வென்றவரே
ஆராதனை ஆராதனை
எங்களை படைத்தவரே
உயிருள்ள தேவன் நீரே
ஆராதனை ஆராதனை
உண்மையும் சத்தியமும்
நீதியும் நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை
வார்த்தைகள் போதாதையா
உம் நாமம் உயர்த்திடுவேன்
ஆராதனை ஆராதனை