Thai Pola Thetrum En Nesarae
தாய் போல தேற்றும் என் நேசரே
தாய் போல அணைக்கும் ஆதரவே
நான் பாடி துதிப்பேன் அல்லேலூயா
என் நேசர் அன்பில் மகிழ்ந்திடுவேன்
உம் அன்பிற்கு இணை இல்லையே
நான் என்றென்றும் உந்தன் பிள்ளையே – (3)
1. என் தாயின் கருவில் என்னை, முன்னே தெரிந்து கொண்டீர் ஐயா
என் பிறந்த நாள் முதலாக, என்னைக் காத்து வந்தீர் ஐயா
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே
கண்ணின் மணி போல பாதுகாத்தீரே – நான் பாடி
2.என் தாய் தந்தை மறந்தாலும், நான் மறவேன் என்று சொன்னீர்
என் உற்றார் நண்பர் கைவிட்டாலும், நான் கைவிடமாட்டேன் என்றீர்
உள்ளங் கைகளில் வரைந்தேன் என்றீரே
வாழ்நாள் முழுதும் என்னோடு இருப்பீரே – நான் பாடி
Chords