Thanneerai Kadakumpoothu
தண்ணீரை கடக்கும்போதும்
என்னோடு இருப்பவரே
வெள்ளங்கள் புரளாமல்
என்னை என்றும் காப்பவரே – 2
அக்கினியில் நடந்தாலும்
சோதனைகள் சூழ்ந்தாலும்
தப்புவித்து காப்பவரே – என்னை
அன்பால் அணைப்பவரே – அக்கினியில்.. தண்ணீரை
எரிகோவின் மதில்களெல்லாம்
உடைத்தவரே – எங்கள்
வாழ்விலும் எதிர்த்து நிற்கும்
தடைகளை உடைப்பீரே – 2
கானானை சொந்தமாய்
தேவ ஜனம் பெற்றனரே
பரலோக கானானை
எங்களுக்கும் தருவீரே –(கானானை) தண்ணீரை
பார்வோனின் சேனையெல்லாம்
தொடர்ந்த போதும் – பெரும்
செங்கடலை பிளந்து
உம் ஜனத்தை நடத்தினீரே – 2
பகலிலே மேகஸ்தம்பம்
இரவிலே அக்கினிஸ்தம்பம்
அற்புதமாய் நடத்தினதே
எங்களையும் நடத்துவீரே – (பகலிலே) தண்ணீரை