Ummodu Pesa Enakoru
உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2)
என் உள்ளம் கவர்ந்தவரே
என் நெஞ்சம் நிறைந்தவரே
இயேசைய்யாஇயேசைய்யா
உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை
எந்நாளும் உம் அருகே
நான் ஓடோடி வந்திடுவேன்
பொல்லாத இவ்வுலகில்
உம்மையல்லாமல் யாருமில்லை (2)
என் நேசரே என் இராஜனே
உம்மார்பினில் நான் சாய்வது
என் தீராத ஆசை
நநநந நநநந நா – உம்மோடு
கல்லான என் மனசு
உம் சொல்லால உருகியது
பூவான என் உசுறு
புது பாமாலை பாடிடுது (2)
என் தேவனே என் ஜீவனே
உம் நன்மைகள் நான் சொல்வது
என் தீராத ஆசை
நநநந நநநந நா – உம்மோடு
Thanks for this song one of the my favorite song