Visuvasiyin Kathil Pada
விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்
1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே – விசுவாசியின்
2. துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்
பயங்கள் யாவும் இயேசுவென்றால் பறந்தோடியே போகும் – விசுவாசியின்
3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் – விசுவாசியின்
4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்
எல்லா நாளும் மாறாச்செல்வம் இயேசுவென்ற பெயரே – விசுவாசியின்
5. என்னாண்டவா, என் ஜீவனே என் மார்க்கமே, முடிவே
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே – விசுவாசியின்
Visuvaasiyin kaadhil pada yaesuvendra naamam
Viruppaayavar seviyil dhoni inippaakudhu paasam
1. Pasitha aathumaavai pasiyaatru mannaavadhuvae
Musippaarudhal ilaithoarkkellaam muttum andha peyarae – Visuvaasiyin
2. Thuyaraiyadhu neekki kaayamaatri gunappaduthum
Bayangal yaavum yaesuvendraal parandhoadiyae poagum – Visuvaasiyin
3. Kaayappatta irudhayathai kazhuvi suthappaduthum
Maayaikonda nenjaiyadhu mayakkaminrividukkum – Visuvaasiyin
4. Ellai illaa kirubaithiral aetru niraindhirukkum
Ellaa naalum maaraaselvam yaesuvendra peyarae – Visuvaasiyin
5. Ennaandavaa en jeevanae en maarkkamae mudivae
Ennaal varunthudhiyai neerae aetrukkollum dhaevae – Visuvaasiyin