Yehovah Nissi Yehovah Nissi
யெகோவா நிசி (4)
யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)
1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளை தளர்த்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே – நம்
2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபெலமோ தேவையா
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
ஜீவ தேவ சேனை அல்லவா – நம்
3. அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
அல்லேலூயா தேவ படை வெல்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – என்றும்
Thank you for the Song lyrics !