Yelumbiduvir Valibare
எழும்பிடுவீர் வாலிபரே
எழும்பிடுவீர் கன்னியரே -2
எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரே
எழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2
1.உல்லாசம் தந்திடும் உலகம் இது
ஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2
ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு
வாடி வதங்கிடும் வருகை அன்று
2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு
ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2
திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று
திருமறை சொல்வதை கேட்பவர் யார்?
3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்
தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2
நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை
தடுத்திட தம்மை தந்தவர் யாரோ?