Yen Intha Sothanai
ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?
ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?
என்று கலங்கி தவித்து நிற்கும்
சூழ்நிலையோ?
எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்
உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார்
திகைத்திடுவார் (ய்)
உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கலங்கிடாதே (2) – ஏன் ஏன் (2)
1. உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்
ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு (2)
இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலே
அந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய் (2) – ஏன் ஏன் (2)
2. இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்
ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதே
உருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்
தம் அரவணைக்கும் கரங்களினால் சேர்த்துக் கொள்வார் – ஏன் ஏன் (2)