Yesuvin Anbinai Arivithida – இயேசுவின் அன்பினை அறிவித்திட

Yesuvin Anbinai Arivithida
இயேசுவின் அன்பினை அறிவித்திட
இணைந்தே செயல்படுவோம்
சுவிசேஷ நற்செய்தி கூறிட
விரைந்தே புறப்படுவோம் (2)

நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
இயேசுவை அறியட்டுமே (2)

நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார் -2
தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார் -2
இலட்சத்திற்காக பரிதபித்தார்
கோடிகட்காக கலங்கிடாரோ (2) – நம் பாரதம்

காலங்கள் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே-2
இயேசுவின் வருகை இதோ அதி சமீபமாகிறதே -2
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
நற்செய்தி சுமந்து புறப்படுவோம் (2) – நம் பாரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *