Song Category: Tamil

Hallelujah Thuthi Ummakae – அல்லேலூயா துதி உமக்கே

Hallelujah Thuthi Ummakae
அல்லேலூயா துதி உமக்கே
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவிதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே

கை நீட்டி தூக்கிவிட்டீர் உயர்த்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய்

Allealooyaa thudhi umakkae
Vaalaakkaamal ennai thalaiyaakkuveer
Keezhaakkaamal ennai maelaakkuveer

Arakkan goaliyaathai azhikkum vallamaiyai
Siriya dhaavithukkul vaithavarae
Aadugal meithavanai jaathigal mathiyilae
Uyarthi thookkineerae maelae maelae maelae maelae

Kai neetti thookkivitteer uyarathil ennai vaitheer
Pillaiyaai maatrivitteer nirandharamaai
Thoosiyai thattivitteer saambalai poakkivitteer
Singaaram thandhuvitteer nirandharamaai

Ennai Um Kaiyil – என்னை உம் கையில்

Ennai Um Kaiyil
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்

Ennai Um Kaiyil
Padaiththaen Muzhuvadhumaai
Ennaiyum Payanpaduththum

Kuyavan Neer Kaliman Naan
Um Siththam Nirai Vaettrumae

Thavariya Paaththiram Naan
Thavarugal Neekki Ennai
Thagudhiyaai Niruththidumae

Kuraivulla Paaththiram Naan
Kuraivugal Neekki Undhan
Karuviyaai Payan Paduththum

Un Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக

Un Vetkathirku Pathilaga
உன் வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான பெலன் வரும்
உன் இலட்சைக்கு பதிலாக
நித்திய மகிழ்ச்சி வரும்
துதித்திடுவோம் போற்றிடுவோம்
மகிழ்த்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்

சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் கொடுப்பாரே -2
துயரத்திற்கு பதிலாக
தைலத்தை கொடுப்பாரே -2
ஆனந்த தைலத்தை கொடுப்பாரே

சோர்வையெல்லாம் மாற்றிடுவார்
துதியின் உடை தருவார் -2
நீதிதேவன் சரிக்கட்டுவார்
ஆறுதல் தந்திடுவார்-2
நல்ல ஆறுதல் தந்திடுவார்

திறந்த வாசல் உனக்கு உண்டு
திகையாதே கலங்காதே -2
அவர் நாமத்தை தொழுதிடுவாய்
மகிமையை அடைந்திடுவாய் -2
பரலோக மகிமையை அடைந்திடுவாய்

Rajathi Rajave – ராஜாதி ராஜாவே

Rajathi Rajave
ராஜாதி ராஜாவே
கர்த்தாதி கர்த்தாவே
அழகில் சிறந்தவரே
ஆராதனை செய்கிறோம்

துதிக்கு பாத்திரரே
கிருபை நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை

வெண் அங்கி தரித்தவரே
வெண்மை ஆனவரே
ஆராதனை ஆராதனை

பரலோகம் திறந்தவரே
பாதாளம் வென்றவரே
ஆராதனை ஆராதனை

எங்களை படைத்தவரே
உயிருள்ள தேவன் நீரே
ஆராதனை ஆராதனை

உண்மையும் சத்தியமும்
நீதியும் நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை

வார்த்தைகள் போதாதையா
உம் நாமம் உயர்த்திடுவேன்
ஆராதனை ஆராதனை

Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும்

Ummai Nesikka
உம்மை நேசிக்க கற்று தாரும்
உள்ளத்தால் முழு பெலத்தால்
உம்மை நேசிக்க கற்று தாரும்

உலகை மறந்து உம்மை நேசிக்க
என்னை மறந்து உம்மை நேசிக்க
சிலுவை சுமக்கையில் நேசிக்க
மரணம் சந்திக்கையில் நேசிக்க

துன்பமான நேரத்தில் நேசிக்க
இன்பமான நேரத்தில் நேசிக்க
கண்ணீரின் மத்தியில் நேசிக்க
தனிமையான நேரத்தில் நேசிக்க

Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு

Ummai Pola Yarundu
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா

1. உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல

2. எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல

3. கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே – உம்மை போல

4. மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல

Ummai Pola Yaarundu
Nanmai Seiya Neerundu
Ummai Thaane Nampuven
En Theva

1. Ummai Thaan Enthen Vaalvil
Aathaaramaai Ninaithu Ullen
Neer Illa Enthen Vaalkai
Veenaai Thaane Poguthaiya – Ummai Pola

2. Elshadaai Aarathipen
Elohim Aarathipen
Adonaai Aarathipen
Yeshuva Aarathipen – Ummai Pola

3. Kalangi Nintra Ennai Kandu
Kaneerai Thudaithavare
Kaalamellaam Kanmani Pola
Karam Pidithu Kaathavare – Ummai Pola

4. Maranathin Paathaithanil
Manam Thalarnthu Nintra Ennai
Maruthuvaraai Neere Vanthu
Maruvaalvu Thantheeraiya – Ummai Pola

Athikalayil Ummai – அதிகாலையிலுமைத் தேடுவேன்

Athikalayil Ummai
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே
தேவாசீர்வாதம் பெற நாடுவேன்
ஜெப தபத்தாலே
இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாயெனை உத்தமனாக்கிடும் – தேவே

1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களிடனிருப்பதா யுரைத்த நல் நாதா!
ஈனப் பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா!
எனக்கான நீசனே! வான ராசனே!
இந்த நாளிலுமொரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதிகாலையிலுமை

2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும் போது
தப்பாது நின் கிருபை தாங்கிட வேணுமப்போது
விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங்கொண்டு மெய்ப்பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது – அதிகாலையிலுமை

3. நரர் யாவர்க்குமுற்ற நண்பனாய் நடத்திடவையே – தீ
நாவின் பாவமற்ற நன்மைகள் மொழிந்திட செய்யே
பரலோக ஆவியை நல் மாரி போலெனில் பெய்யே
புகழான நாதனே! வேத போதனே! பூரணமாயுனைப்
போற்றுவேன் தினம் தினம் மெய்யே – அதிகாலையிலுமை

Chandirane Suriyane – சந்திரனே சூரியனே

Chandirane Suriyane
சந்திரனே சூரியனே
கர்த்தருக்கு கைத்தாளம் போடுங்க
வானங்களே பூமிகளே
கர்த்தருக்கு எக்காளம் ஊதுங்க
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என துதிகள் பாடி நம்ம இயேசு ராஜவ துதியிங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என மகிழ்ந்து பாடி
வரம் தரும் கனி தரும் அருள் தரும் பெலன் தரும்
ஆவி தூய ஆவி எங்கள நிரப்பி தாருமே

யோசேப்பை போல பயந்திடுவேன்
சாமுவேல் போல பேசிடுவேன்
தாவீதை போல ஆடிடுவேன்
தானியேல் போல ஜெபிப்பேன்
வானத்தின் நட்சத்திரமே
மேகத்தின் பனி மழையே
எப்போதுமே எந்நாளுமே
சாரோனின் ரோஜாக்கள் நாங்க
பரலோகத்தின் ராஜாக்கள் நாங்க

கர்த்தருக்கு புது பாடல் பாடிடுவேன்
அவர் நல்லவர் வல்லவர் என்று
சொல்லி பாடுவேன்
ஆதியும் அவரே என் அந்தமும் அவரே
துள்ளி துள்ளி மகிழ்ச்சியோடு
கரங்கள் தட்டி ஆடி பாடி ஸ்தோதரிப்பேனே

யோசுவா போல சென்றிடுவேன்
யூதா போல எழும்பிடுவேன்
ஈசாக்கை போல விதைத்திடுவேன்
சிம்சோன் போல கிழிப்பேன்
பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜாவே
என்றென்றைக்கும் எந்நேரமும்
கர்த்தரின் கரத்தில் நாங்க
இயேசுவின் கரத்தில் நாங்க

Chandhiranae sooriyanae
kartharukku kaithaalam poadunga
Vaanangalae poomigalae
kartharukku ekkaalam oodhunga
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa allaelooyaa allaelooyaa
Ena thudhigal paadi namma yaesu raajava thudhiyunga
Allaelooyaa allaelooyaa allaelooyaa
Ena magizhnthu paadi
Varam tharum kani tharum arul tharum belan tharum
Aavi thooya aavi engala nirappi thaarumae

Yoaseappai poala payanthiduvaen
Saamuvaelai poala paesiduvaen
Dhaaveedhai poala aadiduvaen
Dhaaniyaelai poala jebippaen
Vaanathin natchathiramae
Maegathin pani mazhaiyae
Eppoadhumae ennaalumae
Saaroanin roajaakkal naanga
Paraloakathin raajaakkal naanga

Kartharukku pudhu paadal paadiduvaen
Avar nallavar vallavar endru
Solli paaduvaen
Aadhiyum avarae en antdamum avarae
Thulli thulli magizhchiyoadu
Karangal thatti aadi paadi sthoatharippaenae

Yoasuvaa poala chendriduvaen
Yoodhaa poala ezhumbiduvaen
Eesaakkai poala vidhaithiduvaen
Simsoan poala kizhippaen
Pallathaakkin leeliyae
Saaroanin roajaavae
Endrendraikkum ennaeramum
Kartharin karathil naanga
Yaesuvin karathil naanga

En Nesar Yesuve – என் நேசர் இயேசுவே

En Nesar Yesuve
என் நேசர் இயேசுவே
என் அன்பு இரட்சகா
நீரே வழி நீரே சத்யம்
நீரே எந்தன் தஞ்சம் அன்றோ (2)

உம்மையல்லாமல் எங்கே நான் போவேன்
நீரே என் ஜீவனன்றோ (2)
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

மனிதரின் அன்பால் கைவிடப்பட்டேன்
நோவுக்குள் தள்ளப் பட்டேன்
மாந்தரின் அன்பால் நொருக்கப் பட்டேன்
உம் நேசத்தினால் என்னை அனைத்தீரே
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா

Santhosham Venuma

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
இயேசுவிடம் வாருங்களே
துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
இயேசுவிடம் வாருங்களே (2)
இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (2) – சந்தோஷம்

பாவங்கள் போக்கிடுவாரே
புது வாழ்வு தந்திடுவாரே (2)
பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

கண்ணீரைத் துடைத்திடுவாரே
கரங்களை பிடித்திடுவாரே (2)
கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

சாத்தானை துரத்திடுவாரே
சாபத்தை முறித்திடுவாரே (2)
அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்