En Nesar Yesuve
என் நேசர் இயேசுவே
என் அன்பு இரட்சகா
நீரே வழி நீரே சத்யம்
நீரே எந்தன் தஞ்சம் அன்றோ (2)
உம்மையல்லாமல் எங்கே நான் போவேன்
நீரே என் ஜீவனன்றோ (2)
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்
மனிதரின் அன்பால் கைவிடப்பட்டேன்
நோவுக்குள் தள்ளப் பட்டேன்
மாந்தரின் அன்பால் நொருக்கப் பட்டேன்
உம் நேசத்தினால் என்னை அனைத்தீரே
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்