Song Category: Tamil

Yutha Raja Singam – யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

Yutha Raja Singam

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே – யூத

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே – யூத

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத

4. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத

5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் – யூத

6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை – யூத

7. பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார்
அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார் – யூத

8. கிறிஸ்தவரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம் – யூத

Yutha Raja Singam Uyirththelunthaar
Uyirththelunthaar Narakai Jeyiththelunthaar

1. Vaethaala Kanangal Otidavae
Otidavae Uruki Vaatidavae – Yootha

2. Vaanaththin Senaikal Thuthiththidavae
Thuthiththidavae Paranaith Thuthiththidavae – Yootha

3. Maranaththin Sangilikal Theripattana
Theripattana Notiyil Muripattana – Yootha

4. Elunthaar Enta Thoni Engum Kaetkuthae
Engum Kaetkuthae Payaththai Entum Neekkuthae – Yootha

5. Maathar Thootharaik Kanndaka Makilnthaar
Akamakilnthaar Paranai Avar Pukalnthaar – Yootha

6. Uyirththa Kiristhu Ini Marippathillai
Marippathillai Ini Marippathillai – Yootha

7. Paavaththirkentu Oru Tharam Mariththaar
Avar Mariththaar Orae Tharam Mariththaar – Yootha

8. Kiristhavarae Naam Avar Paatham Pannivom
Paatham Pannivom Pathaththai Siram Annivom – Yootha

Idhu Varai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக

Idhu Varai Seitha

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

1.  உவர் நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி

2. தனி மரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி

3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

Ootridume Um Vallavamiayai – ஊற்றிடுமே உம் வல்லமையை

Ootridume Um Vallavamiayai
ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காய் எழும்பிட

1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல
இன்றும் செய்ய வேண்டுமே – 2

2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே – 2

3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே – 2

Nadanthu Vantha Pathaigal Ellam – நடந்து வந்த பாதைகள் எல்லாம்

Nadanthu Vantha Pathaigal Ellam
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன்
நான் கடந்து பாடுகள் எல்லாம் கர்த்தர் செய்த
நன்மைகளை எண்ணி துதிக்கிறேன்
நடக்கச் சொல்லித் தந்தவர் நடத்திக் காட்டுவார்
நெஞ்சைக் கொடுத்துப்பாரு இயேசு உன்னை துக்கி நிறுத்துவார்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

1. எத்தனை முறை நீயும் ஏமாந்து போயிருப்பே
யாருமில்லை என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதிருப்பே
முகத்தைப் பார்ப்பவன் மனிதன் அல்லவா
இதயத்தைக் காண்பவர் தேவன் அல்லவா
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

2. அனாதை என்றழுதா ஆண்டவன் தான் பொறுப்பாரா
அக்கிரமாங்கள் செய்திட்டாலும் இயேசு நம்மை வெறுப்பாரா
உள்ளங்கைகளில் உன்னை வரைந்தவர்
உனக்காய் சிலுவையில் ஜீவனை தந்தவர்
உன்னை மீட்கவே உயிரோடெழுந்தவர்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

3. உனக்கொரு கஷ்டம் வந்தா உறவுகள் கைகொடுப்பதில்லை
உன்னுடைய துயரங்களில் உன்க்கு பங்கு கொள்ள வருவதில்லை
உள்ளத்தின் பாரங்கன் அறிந்தவர் இயேசுதான்
உனக்கு உதவிட வருபவர் இயேசுதான்
நெஞ்சுக்குள்ளே நீ நினைத்தால்
ஓடிவரும் தேவன்தான்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

Yesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து

Yesu Yesu Endru Azhaithu
இயேசு இயேசு என்று அழைத்து
பேசு பேசு உன் கதையை – 2
உந்தன் குரலைக் கேட்டு
உன்னை மீட்டு வானகம் சேர்க்கும் தேவனவர்

1. வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
சுடராய் அணையா ஓளியாய்
வந்தார் மாபரன் இயேசு – உயிர்
தந்துனை மீட்டார் இயேசு
கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு

2. பாவிகள் நம்மை மீட்கவே மண்ணில்
ஆதவனாய் ஓளிர்ந்தெழுந்தார்
போதனைகள் பல தந்தே – நம்மை
வேதனையில் வெற்றிபெறச் செய்தார்
கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு

Yesuvuke Magimai – இயேசுவுக்கே மகிமை

Yesuvuke Magimai En Raajavuke Magimai
இயேசுவுக்கே மகிமை
என் இராஜாவுக்கே மகிமை

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
என் இயேசு இராஜாவை – அல்லேலூயா

1. இயேசுவுக்கே நன்றி
என் இராஜாவுக்கே நன்றி
இயேசுவுக்கே மகிமை
என் இராஜாவுக்கே மகிமை – துதிப்பேன்

2. இயேசுவே இராஜா
இயேசுவே ஆண்டவர்
இயேசுவே கர்த்தர்
இயேசுவே மேய்ப்பர் – துதிப்பேன்

3. யாவே யீரே
தேவைகளை சந்திப்பார்
யாவே ரஃப்பா
சுகம் அளிக்கும் தேவன் – துதிப்பேன்

4. யாவே ஷம்மா
கூடவே இருக்கிறார்
யாவே எல்ஷடாய்
சர்வவல்லமை தேவன் – துதிப்பேன்

5. பரிசுத்த ஆவி
பரிசுத்த வல்லமை
பரிசுத்த அக்கினி
இப்போதே வரட்டும் – துதிப்பேன்

6. பரிசுத்த ஆவி
பரிசுத்த பிரசன்னம்
பரிசுத்த அக்கினி
இப்போதே இறங்கட்டும் – துதிப்பேன்

Uyirodu Uyiraga Kalanthavaru – உயிரோடு உயிராக கலந்தவரு

Uyirodu Uyiraga Kalanthavaru
உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு
எங்க இயேசு (3) என்று சொல்லு
இதயத்திலே துடிதுடிப்பாய் வைத்தவரு யாரு சொல்லு
நம்ம இயேசு (3) நல்லா சொல்லு

தாயின் கருவில் தெரிஞ்சவரு
என் பேரை சொல்லி அழைச்சவரு

எனக்காக (3) மரித்தீரே
எனக்காக (3) உயிர்த்தீரே

1. பூமியில் வந்தாரே
அன்பை விதைத்தாரே
சந்தோஷம் தான் (2)
அன்று நடந்த அற்புதங்கள்
இன்று இங்கு நடக்கும் ஐயா
குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும்
இயேசு மட்டும் எனக்கு போதும் – எனக்காக

2. கிருபை தருபவர் பெருக செய்பவர்
ஆராதிப்போம் (2)
யோசனை தந்து நடத்திடுவார்
பெரிய காரியம் செய்திடுவார்
உலகத்தை ஜெயித்தார்
சாத்தானை அழித்தார்
கண்ணீரைத் துடைத்து சுகம் கொடுப்பார் – எனக்காக

3. உன்னைப் படைத்தவர் என்னைப் படைத்தவர்
அழகானவர் (2)
ஏந்தி தூக்கி சுமந்தார் ஐயா
கண்மணி போல் காத்தார் ஐயா
நீயும் நானும் அவரின் சொந்தம்
உலகத்தை நாமும் கலக்கிடுவோம் – எனக்காக

Unga Kirubai Thaan Ennai – உங்க கிருபைதான் என்னை

Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

1. உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

2. சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

3. ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

4. ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

Unga Kirubai Thaan Ennai Nadathuhintrathu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye – 2

1. Udaikapatta Nerathillellam
Ennai Uruvaakina Kirubai Ithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye – 2

2. Soornthu Pona Nerathillellam
Ennai Soolnthu Konda Kirubai Ithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye – 2

3. Ontrum Illa Nerathillellam
Enakku Uthavi Seitha Kirubai Ithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye – 2

4. Ooliyathin Paathaiyillellam
Ennai Uyarthivaitha Kirubai Ithu
Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye – 2

Kumbidugiren Nan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

Kumbidugiren Nan Kumbidugiren
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இறைவா கும்பிடுகிறேன்

1. சர்வத்தையும் படைத்த
சர்வ வியாபியே – 2
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

2. மகிமையின் மன்னவனே
மகத்வ ராஜனே – 2
மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

3. வல்லமையின் தெய்வமே
வாழவைக்கும் வள்ளலே – 2
வானத்து மன்னா வாழ்வின் ஜோதி
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

Ellam Neerthane – எல்லாம் நீர் தானே

Ellam Neerthane
எல்லாம் நீர் தானே
இயேசு ராஜனே (2)

1. தாகம் நீர் தானே
தண்ணீர் நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே – எல்லாம்

2. என் பசியும் நீர் தானே
உணவும் நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே – எல்லாம்

3. உதவி நீர் தானே
ஒத்தாசை நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே – எல்லாம்

4. எதிர்காலம் நீர் தானே
எதிர்பார்ப்பு நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே – எல்லாம்

5. அர்ப்பணிப்பேன் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கென்றே
உம் ஆவி ஊற்றுமே
இன்று ஊற்றுமே – அப்பா
உம் அக்கினி ஊற்றுமே – எல்லாம்

6. நிரப்பிடுமே என்னை இன்றே
அப்பா உம் ஆவியாலே
உம் ஆவி ஊற்றுமே
இன்று ஊற்றுமே – அப்பா
உம் அக்கினி ஊற்றுமே – எல்லாம்

Ellam Neerthane
Yesu Rajanae – 2

1. Vaazhvum Neerthanae
Thandheer Neerthanae
Ummaithan Naan Paaduvaen
Ummaithan Naan Pottruvaen
Yesu Rajanae – Ellam

2. En Pasiyum Neerthanae
Unavum Neerthanae
Ummaithan Naan Paaduvaen
Ummaithan Naan Pottruvaen
Yesu Rajanae – Ellam

3. Udhavi Neerthanae
Oththasai Neerthanae
Ummaithan Naan Paaduvaen
Ummaithan Naan Pottruvaen
Yesu Rajanae – Ellam

4. Edhirkaalam Neerthanae
Edhirpaarppu Neerthanae
Ummaithan Naan Paaduvaen
Ummaithan Naan Pottruvaen
Yesu Rajanae – Ellam

5. Vaazhvum Neerthanae
Thandheer Neerthanae
Ummaithan Naan Paaduvaen
Ummaithan Naan Pottruvaen
Yesu Rajanae – Ellam