Song Category: Tamil

Magimai Matchimai – மகிமை மாட்சிமை நிறைந்தவரே

Magimai Matchimai
மகிமை மாட்சிமை நிறைந்தவரே!
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

1. உன்னத தேவன் நீரே!
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

2. ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே!
ஒளியினை தந்ததுமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

3. பரிசுத்த தேவன் நீரே!
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே!
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

4. நித்திய தேவன் நீரே!
நீதி நிறைந்தவரே!
அடைக்கலமானவரே!
அன்பு நிறைந்தவரே!
நல்லவரே வல்லவரே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

5. அற்புதம் தேவன் நீரே!
ஆசீர் அளிப்பவரே!
அகமதில் மகிழ்ந்துமே
துதியினில் புகழ்ந்துமே
ஆவியோடும் உண்மையோடும்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

In English:

Magimai Matchimai Nirainthavare
Magilvudan tholuthiduvom
Parisuththa devanaam yesuvai
Paninthe tholuvom

1. Unnatha devan neere
Niyaanam nirainthavare
Mulangaal yaavume
Paaril madangiduthe
Uyarnthavare siranthavare
Endrum tholuthiduvom – Magimai

2. Oruvarum seeraa oliyil
Vaasam seibavare
Oliyinai thanthathume
Ithayathil vaasam seiyum
Oliniraive arul niraive
Endrum tholuthiduvom  – Magimai

3. Parisuththa devan neere
Paatham paninthiduvom
Kaluviye niruththineere
Sathiyaa devane neere
Kanam magimai seluththiye
Naam endrum tholuthiduvom – Magimai

4. Niththiyaa devan neere
Neethi nirainthavare
Adaikkalamaanavare
Anbu nirainthavare
Nallavare vallavare
Endrum tholuthiduvom – Magimai

5. Arputham devan neere
Aaseer alippavare
Agamathil magilnthume
Thuthiyinil pugalnthume
Aaviyodum Unmaiyodum
Endrum tholuthiduvom  – Magimai

Neer Ennodu Irukkum Pothu – நீர் என்னோடு இருக்கும் போது

Neer Ennodu Irukkum Pothu
நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே
தோல்வி எனக்கில்லையே-நான்
தோற்றுப் போவதில்லையே

அல்லேலூயா அல்லேலூயா

1. மலைகளை தாண்டிடுவேன்-கடும்
பள்ளங்களை கடந்திடுவேன்
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன்

2. சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே
அபிஷேகம் எனக்குள்ளே நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன்

3. மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே

Neer Ennodu Irukkum Pothu
ennaalum vettri vettriye
Tholvi enakkillaiye naan
Thottru povadhillaiye – Neer Ennodu

1. Malaigalaith thandiduven
Kadum pallangalaik kadandhiduven
Sadhigalai muriyadippen
Saaththanai jeyiththiduven
Alleluya (4) – Neer Ennodu

2. Siraichchalaik kadhavugalum
En thudhiyinal Udaindhidume
Abishegam enakkulle
Naan Aadippaadi magilndhiduven
Alleluya (4) – Neer Ennodu

3. Maramame koor enge
Paadhalame Jeyam enge
Kiristhu enakku Jeevan
Saavenukku Aadhaayame
Alleluya (4) – Neer Ennodu

Paralogame Ummai – பரலோகமே உம்மைத் துதிப்பதால்

Paralogame Ummai
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தவே அங்கே வாழ்கியீர்
உம் ஆலயத்தில் உம்மை துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் -2

1. துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒனறாக கூடித் துதிக்கிறோம்

2. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் -2

3. உம்மைப் போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே -2

4. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் -2

Naam Aradhikum Devan – நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

Naam Aradhikum Devan
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே – 2
எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்
விடுவிக்க வல்லவரே – 2

1. நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜுவாலையிலே
அவியாமல் காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

2. நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன் சென்றிட
கரம் பற்றி நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

3. சத்துருவின் கோட்டைகளை
தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட
தாங்கியே நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

In english

Naam Aradhikum Devan Nallavar
Viduvikka Vallavarae – 2
Yerikindra Akkinikkum Rajavirkkum
Viduvikka Vallavarae – 2

1. Nammai Kaakkindravar
Thootharai Anuppiduvaar
Akkini Juvaalaiyile
Aviyaamal Kaaththiduvaar
Idaividaamal Aarathippom
Nam Vaazhvil Yendrum Jeyamae (2)

2. Nammai Azhaitthavaro
Kaividavae Maattaar
Kalangaamal Mun Sendrida
Karam Pattri Nadathiduvaar
Idaividaamal Aarathippom
Nam Vaazhvil Yendrum Jeyamae (2)

3. Sathuruvin Kottaigalai
Thagarthida Uthavi Seivaar
Thayangaamal Mun Sendrida
Thaangiyae Nadathiduvaar
Idaividaamal Aarathippom
Nam Vaazhvil Yendrum Jeyamae (2)

Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்

Ithu Sinthikkum Kaalam
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே

பல்லவி
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே

1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ

2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ

Palarae Or Nesar – பாலரே ஓர் நேசர் உண்டு

Palarae Or Nesar
பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே
நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே
உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும்
இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும்

1. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச வீட்டிலே
பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே
ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ?
அங்குளளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ

2. பாலரே, ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டிலே
நல் மீட்பரின் பேரன்பால் பொற்கிரீடம் அணிவீர்
இப்போது மீட்பைப் பெற்று மா நேசர் பின்சென்றார்
இவ்வாடா ஜீவ கிரீடம் அப்போது சூடுவார்

3. பாலரே, ஓர் கீதம் உண்டு விண் மோட்ச வீட்டிலே
மா ஜெய கீதம் பாட ஓர் வீணையும் உண்டே
அந்நாட்டின் இன்பம் எல்லாம் நம் மீட்பர்க்குரிமை
நீர் அவரிடம் வாரும், ஈவார் அவ்வின்பத்தை

Paralogame En Sonthame – பரலோகமே என் சொந்தமே

Paralogame En Sonthame
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ

1. வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்

2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவர் மகிமையே எனது லட்சியமே

3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்

4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்

5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே

6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே

7. பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்

Arul Eralamai Peiyum – அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே

Arul Eralamai Peiyum
அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே

பல்லவி
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள்

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள்

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள்

Arul Aeraalamaai Peiyum Uruthi Vaakkithuvae
Aaruthal Thaeruthal Seiyum Thiralaam Mikuthiyae

Arul Yeraalam Arul Avasiyamae
Arpamaai Sorpamaai Alla Thiralaai Peiyattumae

1. Arul Yeraalamaai Peyyum Maekamanthaaramundaam
Kaadaana Nilaththilaeyum Selippum Poorippumaam – Arul

2. Arul Yeraalamaai Peiyum Yaesu Vantharulumaen
Ingulla Koottathilaeyum Irangi Thangidumaen – Arul

3. Arul Yeraalamaai Peiyum Poliyum Ichchanamae
Arulin Maariyai Thaarum Jeeva Thayaapararae – Arul

Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில்

Parisuthar Kootam Naduvil

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே

அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ – 2

1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ – 2
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார் – 2 (…பரிசுத்தர்)

2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே – 2
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ – 2 (…பரிசுத்தர்)

3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை – 2
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் – 2 (…பரிசுத்தர்)

4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே – 2
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும் – 2 (…பரிசுத்தர்)

Parisuththar Koottam Naduvil

Joliththidum Suththa Jothiye

Aroobiye Ivvelaiyil
Adiyaar Nenjam Vaareero – 2

1. Meen Kaettal Paampai Arulvaar Unntoo
Kal Thinna Kodukkum Pettar Unntoo – 2
Pollaathor Koodach Seythidaar
Narpithaa Nalam Arulvaar – 2 (…Parisuththar)

2. Suththam Virumbum Suththa Jothiye
Virumbaa Asuththam Yaavum Neekkume – 2
Paavi Neesa Paavi Naanaiyaa
Dhevaa Irakkam Seyyamaattiro – 2 (…Parisuththar)

3.Paarum Thanthaiye Enthan Ullaththai
Yaarum Kaannaa Ul Alangolaththai – 2
Manam Nonthu Marulukindren
Parisuththam Kenjukindren – 2 (…Parisuththar)

4. Thunai Vendum Thakappane Ulakile
Ennai Ethirkkum Sakthikal Pala Unde – 2
En Jeevan Ellaiyengilum
Parisuththam Ena Ezhuthum – 2 (…Parisuththar)

https://www.youtube.com/watch?v=F8C0O12IZwc

Thuthipaen Thuthipaen Thuthipaen – துதிப்பேன் துதிப்பேன்

Thuthipaen Thuthipaen Thuthipaen
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்

1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
என்னை நோக்கி அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைக் காத்து அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்