Thuthipaen Thuthipaen Thuthipaen
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்
1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
என்னை நோக்கி அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைக் காத்து அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்