உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து கிடப்பேன் ‘பா
உங்க பிரசன்னம் சூழ உலகத்தை நான் மறந்திடுவேன் ‘பா (2)
என் ஆவியானவர் என்னை நடத்தி செல்வீரே
என்னை நீச்சல் ஆழமே ஐயா அழைத்து செல்வீரே (2)
அன்று மோசே பார்த்த முகத்தை எனக்கும் பார்க்க ஆசப்பா
உங்க கிருபயால உமது முகத்தை காட்டும் இயேசப்பா (2)
நான் பார்த்து விட்டாலே உம்மை பணிந்துடுவேனே (2)
உங்கள் பாதங்களின் தழும்புகளில் முத்தம் இடுவேனே (2) – உங்க வேதத்தோட
என்னை தேற்றிடிவே எனக்குள் வந்த ஆவியானவரே
என்னை முத்திரை இட்டீர் முத்தங்கள் உமக்கு ஆவியானவரே (2)
நீர் நிறைந்ததனாலே நான் நிரம்புகின்றேனே(2)
உங்க அபிஷேகத்தால் அடிமை நானும் பிழைத்து கொண்டேனே (2) – உங்க வேதத்தோட
யாக்கோபு போல ரா முழுவதும் ஜெபிக்க ஆசப்பா
ஆவியானவரே இறங்கி வந்து பெலப்படுத்துங்கப்பா (2)
நான் ஜெபித்துவிட்டாலே ஜெயம் பெற்றிடுவேனே (2)
ஜீவ யாத்திரையில் ஸ்தோத்திரமே செலுத்திடிவேனே (2) – உங்க வேதத்தோட
Karthar En Meiparai Irukindrer
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
நான் தாழ்ச்சியடைவதில்லை
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
நான் வெட்கபட்டு போவதில்லை
அமர்ந்த தண்ணீர் அண்டை சேர்க்கின்றீர்
நான் தாகமடைவதில்லை
Nesare En Nesare
நேசரே என் நேசரே
உம் மார்பில் சாய்ந்திடுவேன்!
சாய்ந்திளைப்பாறிடுவேன்!
என் நேசமே என் பாசமே
என் அன்பரே என் இன்பரே!
உம் மார்பில் சாய்ந்திடுவேன்!
சாய்ந்திளைப்பாறிடுவேன்!
அன்னையே என் தந்தையே
உம் அன்பில் திளைத்திடுவேன்!
உங்க அன்பில் திளைத்திடுவேன்!
உந்தன் அன்பின் ஆழம் என்ன
அகலம், நீளம் என்ன
உயரம் என்ன வென்று அறியேனே!
உம் அன்பில் திளைத்திடுவேன்!
உங்க அன்பில் திளைத்திடுவேன்!
துணையாளரே மணவாளரே
உம் நாமம் உயர்த்திடுவேன் உங்க நாமம் உயர்த்திடுவேன்
உள்ளங்கையில் என்னை வரைந்துவைத்து தினம் ரசிக்கும்
அன்பு என்ன புரியலையே
தாய் மறந்தாலும் நான் மறவேன் என்று சொல்லும்
அன்பு ஒன்றும் புரியலையே
உம் நாமம் உயர்த்திடுவேன் உங்க நாமம் உயர்த்திடுவேன்
Parisutha Pathayil Endrume Naan
பரிசுத்த பாதையில் என்றுமே நான் சென்றிட
பரனே நான் என்னையே முற்றிலும் படைக்கிறேன்.
1. இயேசுவே உம்மழகு என்னில் பிறர் காண
இவ்வேளையில் என்னை தத்தம் நான் செய்கிறேன்
இறங்கிடுவீர் எந்தன் வேண்டுதல் கேட்டு
இனிமேல் இவ்வுலகில் பிரகாசித்திடவே. (பரிசுத்த)
2. என்னை காண்போர் உம்மை காண உந்தன் சாயலை
தரித்தீர் இலோகத்தில் நான் தூய்மை அடைய
ஈசானே நீ அருள் புரிந்திடுவீரே
இன்று இந்த ஜெபவேலையில் பெற்று எழும்ப (பரிசுத்த )
3. ஆவியில் மென்மேலும் அனலாய் நான் ஜீவிக்க
ஆசீர் பொழிந்திடும் எந்தன் நேசர் இயேசுவே
மாசில்லா பரிசுத்தம் அடைந்திடவே
மன்னவனே உம் கிருபை ஈந்திடுவீரே (பரிசுத்த )
4. உம் பெலன் இல்லாமல் யாதும் செய்ய இயலேன்
உலகினில் ஜீவ சாட்சியாக நான் விளங்கிட
உன்னத பெலன் ஈந்து நினைத்திடுமே
உமக்காக ஜீவிப்பேன் எக்காலத்திலுமே (பரிசுத்த )
5. மண்ணுலக இன்பங்கள் ஒன்றும் வேண்டேனே
மாமிச இச்சைகள் நித்தம் நான் வெறுக்கிறேன்
விண்ணவர் சாயலை மகிமையாய் பெற்று
கண்ணிமைக்கும் பொழுதில் வேகம் மாறிடுவேனே (பரிசுத்த)
Vallamai Gnanam Neethiyum Nirantha
வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த
வாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம் -2
வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்
அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர் -2
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே -2
1. கல்லான என் உள்ளம் அதை
உடைத்திட்ட நேசம் அது
கனிவான தம் அழைப்பிதழால்
அழைத்திட்ட நேசம் அது -2
உலகிலே காணாத நேசம்
என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்
இதுவரை அறியாத வாழ்வை
என் பரமனின் பாதத்தில் கண்டேன்
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே
2. காணாமல் நான் அலைந்திருந்தேன்
தேடிடும் நேசம் கண்டேன்
கண் திறந்து கண்ணீர் துடைத்த
நாதனின் நேசம் கண்டேன் -2
தரணியில் உணராத மகிழ்ச்சி
தூய தேவனின் ஆவியில் உணர்ந்தேன்
நீதியின் வாழ்வெமக்களித்த
நீதி தேவனின் நீதியை அறிந்தேன்
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே – வல்லமை ஞானம்