தாய் போல தேற்றும் என் நேசரே
தாய் போல அணைக்கும் ஆதரவே
நான் பாடி துதிப்பேன் அல்லேலூயா
என் நேசர் அன்பில் மகிழ்ந்திடுவேன்
உம் அன்பிற்கு இணை இல்லையே
நான் என்றென்றும் உந்தன் பிள்ளையே – (3)
1. என் தாயின் கருவில் என்னை, முன்னே தெரிந்து கொண்டீர் ஐயா
என் பிறந்த நாள் முதலாக, என்னைக் காத்து வந்தீர் ஐயா
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே
கண்ணின் மணி போல பாதுகாத்தீரே – நான் பாடி
2.என் தாய் தந்தை மறந்தாலும், நான் மறவேன் என்று சொன்னீர்
என் உற்றார் நண்பர் கைவிட்டாலும், நான் கைவிடமாட்டேன் என்றீர்
உள்ளங் கைகளில் வரைந்தேன் என்றீரே
வாழ்நாள் முழுதும் என்னோடு இருப்பீரே – நான் பாடி
உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன்
அடைக்கலம் நான் தேடினேன் அதில்லேன்னை நான் தொலைத்தேன்
என்னையே மறந்து போனேன்
உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்
புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர்
அப்பா அப்பா
மகன்(மகள்) நான்
உம் மகன் (மகள்)நான்
உம்மை வெறுத்து நான் எங்கே போவேன் நீரே என் அடைக்கலமே
இதுவரை நானறியேன் நானே உம் பிள்ளை என்று
உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை
உம் நிழலில் தான் எந்தன் பாதுகாப்பு
அப்பா அப்பா
மகன் நான்
உன் மகள் நான்
உம் கண்ணின் மணி தானே அப்பா – நான்
தள்ளாமலும் விட்டு விலகாமலும்
அவமானத்தில் இருந்தென்னைகாப்பாற்றினீர்
அணைத்துக் கொண்டீர் என்னை முத்தம் செய்தீர் இரட்டை கலைந்து எனக்கு புது வஸ்திரம் தந்தீர்
அப்பா அப்பா மகன் நான் உம் மகன் தான்
உன் கண்ணின் மணி தானே அப்பா
Un Thukka Naatkalellaam
உன் துக்க நாட்களெல்லாம்
முடிந்தே போகுமே
அவரே உன் வெளிச்சமாய்
என்றும் பிரகாசிப்பார் – 2
நீ போகும் இடம் எல்லாம்
உன்னோடிருப்பவர்
சொன்னதை செய்யும் வரை
கைவிடமாட்டார் – 2
உம் அண்டை தேவனே
நான் வந்து நிற்கிறேன்
நீர் என்னை புறம்பே
தள்ளுவது இல்லையே
விசுவாசத்தாலே
நீதிமான் பிழைப்பான்
எந்தன் விசுவாசத்தால்
நீர் என்னை தாங்கினீர் (…நீ போகும்)
உம் பாதத்தில் நான்
நின்ற வேளையில்
கர்த்தாவே நீர் எந்தன்
கரம் பிடித்தீர்
அஞ்சிட மாட்டேன்
தயங்கிட மாட்டேன்
தேவனே நீரே
என்னோடிருப்பதால் (…நீ போகும்)
Un Thukka Naatkalellaam
Mudinthe Pohume
Avare Un Velichamaai
Endrum Prahaasippaar – 2
Ne Pogum Idam Ellaam
Unnodiruppavar
Sonnathai Seyyum Varai
Kaivida Maattaar – 2
Um Andai Devane
Nan Vanthu Nirkkiren
Neer Ennai Purambe
Thalluvathu Illaye
Visuvaasathaale
Neethimaan Pizhaippaan
Enthan Visvaasathaal
Neer Ennai Thaangineer (… Ne Pogum)
Um Paathathil Naan
Nindra Velaiyil
Karthaave Neer Enthan
Karam Piditheer
Anjida Maaten
Thayangidamaaten
Devane Neere
Ennodirupathaal (… Ne Pogum)
Aayiram Aayiram Padalgalal
ஆயிரம் ஆயிரம் பாடல்களால்
அதிசய நாதனை புகழ்ந்திடுவேன்
அனந்த கீதம் பாடிடுவேன் (2)
நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர் 2
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன் 2
வான தூத சேனை எல்லாம் வாழ்த்துகின்ற பரிசுத்தரே
வான மேன்மை வெறுத்து மானிடராய் பிறந்தாரே
வானிலும் பூவிலும் என்னாசை நீரே
வாழ்த்தி என்றும் திருநாமம் புகழ்ந்திடுவேன்
இஸ்ரவேலின் துதியில் வாசம் செய்யும் தூய தேவனே
பாலையிலே இரட்சகராய் பாதுகாத்து நடத்தினீரே
செங்கடலோ சேனைகளோ எதிர்த்து வந்தாலும்
சோர்ந்திடாமல் கரம் தட்டி துதித்திடுவேன்
ஆழியின் அலை போல் சோதனைகள் பெருகினாலும்
அக்கினியின் சோதனையால் உள்ளம் எல்லாம் நொறுங்கும் போதும்
தாயை போல கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி
ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
பசியோ, துன்பமோ, துஷ்ட துர்குணமோ?
வியாகுலமோ, விரோதங்களோ?
மிஞ்சும் நாச மோசம், கொடும் பட்டயமோ?
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
சரணம் 1
நிகழ் காரியமோ, வரும் காரியமோ
நிகராகாதே பரன் அன்பதற்கு!
வல்லமைகளுக்கோ, வாக்கின் வலிமைகட்கோ
சொல் வாதைகட்கோ, கடும் பாதைகட்கோ
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
சரணம் 2
அதிகாரங்களும் அவமானங்களும்
சதி மோசங்களும் அதை மேட்கொள்ளதே
உயர்வானாலும் தாழ்வானாலும்
முடிந்தாலும் எல்லாம் இழந்தாலும்
பிரிக்க முடியாது அவர் அன்பை விட்டு
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
சரணம் 3
நன்றியால் உள்ளம் பொங்கி வழிகிறதே
நன்மை தான் அவர் செய்வதெல்லாம் எனக்கு
துதி, ஸ்தோத்திரம், கனம், வல்லமை, மகிமை
பதிலாக செலுத்தி வணங்குகிறேன்
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?