Aayiram Aayiram Padalgalal
ஆயிரம் ஆயிரம் பாடல்களால்
அதிசய நாதனை புகழ்ந்திடுவேன்
அனந்த கீதம் பாடிடுவேன் (2)
நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர் 2
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன் 2
வான தூத சேனை எல்லாம் வாழ்த்துகின்ற பரிசுத்தரே
வான மேன்மை வெறுத்து மானிடராய் பிறந்தாரே
வானிலும் பூவிலும் என்னாசை நீரே
வாழ்த்தி என்றும் திருநாமம் புகழ்ந்திடுவேன்
இஸ்ரவேலின் துதியில் வாசம் செய்யும் தூய தேவனே
பாலையிலே இரட்சகராய் பாதுகாத்து நடத்தினீரே
செங்கடலோ சேனைகளோ எதிர்த்து வந்தாலும்
சோர்ந்திடாமல் கரம் தட்டி துதித்திடுவேன்.
ஆழியின் அலை போல் சோதனைகள் பெருகினாலும்
அக்கினியின் சோதனையால் உள்ளம் எல்லாம் நொறுங்கும் போதும்
தாயை போல கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி
ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்