Kadaisikala Abishekham
கடைசி கால அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அறுவடையின் காலமிதே
தூய ஆவியால் நிரப்பிடுமே
அக்கினியாய் இறங்கிடுமே
அக்கினி நாவாக அமர்ந்திடுமே
பெரும் காற்றாக வீசிடுமே
ஜுவ நதியாக பாய்திடுமே
எலும்புகளின் பள்ளத்தாக்கில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்கதரிசனம் உரைத்திடவே
கர்மேல் மலை ஜெப வேளையில்
ஒரு கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாப் நடுங்கின போல்
அக்கினி மழையாக பொழிந்திடுமே
சீனாய் மலை மேலே
அக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னில் அக்கினியாய் ஊற்றிடுமே