Song Category: Tamil

Um Kirubai Ennaku Pothum – உம் கிருபை எனக்கு போதும்

Um Kirubai Ennaku Pothum

உம் கிருபை எனக்கு போதும் (3)

என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும் – 2

1. தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்
கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்
வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்
ஒண்ணுமே இல்லனாலும் உம் கிருபை போதும்

இயேசப்பா நீங்க மட்டும் – 2
என் கூட இருந்தா

போதுமே கிருபை போதுமே
மாறுமே எல்லாமே மாறுமே – 2 (…என் பெலவீனத்தில்)

2. மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும்
தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும்
அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும் (…இயேசப்பா நீங்க)

Um Kirubai Enakku Podhum – 3

En Belaveenatthil Um Belamo
Pooraṇamaai Vilangum – 2

1. Thaazhvil Irundhaalum Um Kirubai Podhum
Kanneeril Moozhginaalum Um Kirubai Podhum
Vedhanai Irundhaalum Um Kirubai Podhum
Onnume Illanaalum Um Kirubai Podhum

Yesappaa Neenga Mattum – 2
En Kooda Irundhaa

Podhume Kirubai Podhume
Maarume Ellaame Maarume – 2 (…En Belaveenatthil)

2. Malaigal Vilaginaalum Um Kirubai Podhum
Parvadhangal Peyarndhaalum Um Kirubai Podhum
Thanneerai Kadandhaalum Um Kirubai Podhum
Akkiniyil Nadandhaalum Um Kirubai Podhum (…Yesappa Neenga)

Puthiya Varudathirkul – புதிய வருடத்திற்குள் நடத்தியவர்

Puthiya Varudathirkul

புதிய வருடத்திற்குள் நடத்தியவர் நீர்தானே
புதிய வாக்குத்தத்தம் குடுத்து விட்டீர் – 2

பேரோ புகழோ தேசமெங்கிலும்
பறக்கும் கழுகைப்போல மாற்றினீரையா

கீர்த்தியும் புகழ்ச்சியும் கூட்டு சேர்த்திரே
வெட்கப்பட்ட தேசத்தில் உயர்த்தி வைத்தீரே – 2 (…புதிய)

1. ஏங்கி நின்ற என் கரங்களெல்லாம்
குடுக்கும் கரங்களாய் மாற்றினீரையா

அனைத்து தேவைகளை சந்தித்தீரே
நீர் அளவிற்கு அதிகமாக ஆசீர்வதித்தீரே – 2 (…புதிய)

2. வியாதி ஒருபக்கம் மரணமோ ஒருபக்கம்
இயேசு மறுபக்கம் நின்றீரையா

அன்பான மார்பில் என்னை சுமந்து கொண்டீரே
அணைக்கும் கரங்களால் அரவணைத்தீரே – 2 (…புதிய)

Puthiya Varudaththirkul Nadaththiyavar Neerthane
Puthiya Vaakkuththaththam Kuduththuviteer – 2

Paero Pugazho Desamengilum
Parakkum Kazhugai Pola Mattrineeraiya

Keerththiyum Pugazhchchiyum Koottu Serththire
Vetkappatta Desaththil Uyarththi Vaitheere – 2 (…Puthiya)

1. Yengi Nindra En Karangalellaam
Kudukkum Karangalaai Maattrineeraiyaa

Anaiththu Thevaikalai Santhiththeere
Neer Alavirkku Athigamaaga Asirvathiththeere – 2 (…Puthiya)

2. Vyaathi Oru Pakkam Maranamo Oru Pakkam
Yesu Marupakkam Nindreeraiyaa

Anbaana Maarbil Ennai Sumanthu Kondeere
Anaikkum Karangalaal Aravanaiththeere – 2 (…Puthiya)

Unga Kirubai Illama Naan – உங்க கிருபை இல்லாம நான்

Unga Kirubai Illama

உங்க கிருபை இல்லாம
நான் ஓன்றுமில்லையே
உங்க தயவு இல்லாமல்
நான் ஓன்றுமில்லையே – 2

உங்க காருண்யம் தானே
உயர்த்தியது
உங்க அபிஷேகம் தான் என்ன
நடத்தினது -2

உங்க அன்பை எண்ணி
இன்றும் என்றும் துதித்திடுவேன்
உங்க கிருபையை நித்தம் நித்தம்
உயர்த்திடுவேன் -2

1. மலைகள் விலகினாலும்,
கிருபை விலகாதையா
பர்வதம் அழிந்தாலும்,
அன்பு அழியாதையா -2

2. பெலவீன நேரத்திலே,
பெலனாய் வந்தீரைய்யா
தள்ளாடி சாயும்போதும்,
தாங்கி கொண்டீரைய்யா

3. Waste ஆ போன என்ன,
தேடி வந்தீரைய்யா
Useless ஆன என்ன,
உயர்த்தி வைத்தீரேய்யா -2

Unga Kirubai Illama
Nan Ondrumillaye
Unga Dhayavu Illama
Nan Ondrumillaye – 2

Unga Kaarunyam Thaane Uyarthinadhu
Unga Abishegam Thaane Nadathinadhu – 2

Unga Anbai Enni Indrum, Endrum Thudhithiduven

Unga Kirubayai Nitham Nitham Uyarthiduven-2

1. Malaigal Vilaginaalum
Kirubai Vilagadhaiyaa
Parvatham Azhindhaalum
Anbu Azhiyadhaiyaa-2

2. Belaveena Nerathile
Belanaai Vandheeraiya
Thalladi Saayumbodhu
Thaangi Kondeeraiya -2

3. Waste Ah Pona Enna
Thedi Vandheeraiya
Useless Ana Ennai
Uyarthi Vaitheeraiya – 2

 

Um Maarbil Saainthaal – உம் மார்பில் சாய்ந்தால் சுகமே

Um Maarbil Saainthaal

உம் மார்பில் சாய்ந்தால் சுகமே
உம் தோளில் கிடந்தால் ஜெயமே – 2
உம் கைகள் என்னில் கோர்த்தால் பரிசுத்தமே
உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – 2 (…உம் மார்பில்)

1. மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன்
உம் அன்பிலே மூழ்கணுமே
உம்மோடு என்றென்றும் நடக்கணுமே – 2 (…உம் மார்பில்)

2. மணவாளனே உமக்காகவே
பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன்
மணவாட்டி என்னை உம் வருகையில்
உம்மோடு சேர்த்து கொள்வீரா – 2 (…உம் மார்பில்)

Um Maarbil Saainthaal Sugamey
Um Tholil kidanthaal Jeyamey – 2
Um kaigal ennil korththaal Parisuththamey
Ummidaththil naan Kidanthaal Paralogamey – 2 (…Um Maarbil)

1. Maanaanathu Neerodaiyai
Vaanjjippathu pol Naan Vaanjjikkiren
Um Anbiley Moozhganumey
Ummodu Entrentrum Nadakkanumey – 2 (…Um Maarbil)

2. Manavaalaney Umakkaagavey
Parisuththa Vaazhvondru Vaazhven
Manavaati Ennai Um Varugayil
Ummodu Serththu Kolveeraa – 2 (…Um Maarbil)

Immanuvelin Ratha Ootratho – இம்மானுவேலின் இரத்தம் ஊற்றதோ

Immanuvelin Ratha Ootratho
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
எப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலுயா பார் அதோ கல்வாரியிலே அதோ
ஐந்தாறு கூடி ஓடுது
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2)

1. பாவியான கள்ளனும் அவ்வூற்றில் ழூழ்கினான்
பாவ மன்னிப்பானந்தம் கண்டு பூரித்தான் (…இம்மானுவேலின்)

2. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே (…இம்மானுவேலின்)

3. ஆவியால் நிறைத்து தேவ சாயலாக்கினார்
தூய இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார் (…இம்மானுவேலின்)

4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த இரத்தமே
பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே (…இம்மானுவேலின்)

5. ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவின் இரத்தமே
தீட்டுப்பட்ட குஷ்ட ரோகம் தீர்க்கும் இரத்தமே (…இம்மானுவேலின்)

Immanuvelin Raththa Oottratho
Eppaavam Pokkum Jeeva Oottratho
Alleluyaa Paar Atho Kalvaariyile Atho
Ainthaaru Koodi Ooduthu
Anbin Inba Vellam Peruguthu (2)

1. Paaviyaana Kallanum Avvoottril Moozhkinaan
Paava Mannipaanantham Kandu Pooriththaan (…Immanuvelin)

2. Paavi Ennil Konda Dheva Anbin Agalame
Neelam Aazham Uyaram Innum Valarnthu Sellave (…Immanuvelin)

3. Aaviyaal Niraiththu Deva Saayalaakkinaar
Thooya Raththaththaal Kazhuvi Suththamaakkinaar (…Immanuvelin)

4. Pisaasu Ulagam Maamsam Moondrum Jeyiththa Raththame
Pinnadaiyaa Siluvai Kodi Uyarththuvom Naame (…Immanuvelin)

5. Eettiyaal Kuththappatta Yesuvin Raththame
Theettupatta Kushta Rogam Theerkkum Raththame (…Immanuvelin)

Senaigalin Kartharey – சேனைகளின் கர்த்தரே

Senaigalin Kartharey

சேனைகளின் கர்த்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே – 2 (…சேனைகளின்)

1. வானத்தின் கீழே பூமியின் மேலே
வேறொரு நாமம் இல்லை – 2
ஜெயம் ஜெயமே – 2
என்றென்றும் ஜெயம் நமக்கே – 2 (…சேனைகளின்)

2. ஊற்றுத்தண்ணீரே ஜீவ நதியே
பொங்கி வாருமையா – 2
அபிஷேகியும் அனல் மூட்டிடும்
என்றென்றும் அபிஷேகியும் – 2 (…சேனைகளின்)

3. துதி உமக்கே கனம் உமக்கே
மகிமையும் மாட்சிமையே – 2
கோடிகோடியாய் கோடிகோடியாய்
நன்றி நன்றி ஐயா – 2

சேனைகளின் கர்த்தரே நீங்க

பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே – ஆஆஆ (2) (…சேனைகளின்)

Senaigalin Kartharey

Neer Parisuthar Parisuthar
Parisuththar Parisuththare – 2 (…Senaigalin)

1. Vaanaththin keezhe boomiyin mele
Veroru naamam illai – 2
Jeyam jeyame – 2
Endrendrum jeyam namakke – 2 (…Senaigalin)

2. Oottruththanneere jeeva nathiye
Pongi vaarumayyaa – 2
Abishegiyum anal moottidum
Endrendrum abishegiyum – 2 (…Senaigalin)

3. Thuthi umakke ganam umake
Magimayum maatchimaye – 2
Kodikodiyaai kodikodiyaai
Nandri nandri ayyaa – 2

Senaigalin Kartharey Neenga

Parisuththar Parisuththar
Parisuththar Parisuththare – aah aah aah (2) (…Senaigalin)

Nerae Ellam Nerae En – நீரே எல்லாம் நீரே என் வாழ்வில்

Nerae Ellam Nerae En

நீரே எல்லாம் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே – 2
செய்வேன் உம் சித்தம் செய்வேன்
என்றென்றும் வாழ்வில் நீரே
நீரே எல்லாம் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே

1. எனக்காக மண்ணில் பிறந்தீரே
எனக்காக சிலுவை சுமந்தீரே
எனக்காக உயிர்தெழுந்தீரே
என்னில் நீரே என்றென்றும் வாழ்வில் நீரே

2. என் பாவம் எல்லாம் மன்னித்தீரே
என் கோபம் எல்லாம் நீக்கினீரே
என் சுபாவம் எல்லாம் மாற்றினீரே
என்னில் நீரே என்றென்றும் வாழ்வில் நீரே

3. என் எண்ணம் எல்லாம் புரிந்தீரே
என் ஏக்கம் எல்லாம் அறிந்தீரே
என் ஆசை எல்லாம் செய்தீரே
என்னில் நீரே என்றென்றும் வாழ்வில் நீரே

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

Azhagullavar Adhisayarae
அழகுள்ளவர் அதிசயரே
உம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா -2
வழிகள் அடைத்த நேரம்
வந்தீரே நல்ல நண்பனாய்
தள்ளிடாமல் கைவிடாமல்
தந்தீரே மாறா உம் அன்பை

அணைத்திடும் என் நல்ல தேவா
காத்திடும் தேவை நிறைவேற்றும்
தாங்கிடும் எந்தன் வேதனையில்
காவலாய் என்றும் கூட இருப்பீர் -2

எந்தன் ஜெபம் கேட்டு
அருகினில் ஓடி வந்து
கண்ணீர் எல்லாம் துடைத்தவரே -2
என்றும் உம்மோடு நடந்திடவே தான்
உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா -2 -அணைத்திடும்

என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்
உம்மை விட்டு நான் எங்கு போவேன்
இம்மட்டும் என்னை அழியாமல் காத்த
உம்மை நான் எப்படி மறப்பேன் தேவா? -2 -அணைத்திடும்

Azhagullavar Adhisayarae
Ummel Naan saindhiduven Deva – 2
Vazhigal Adaitha Neram
Vandhirae Nalla Nanbanaai
Thallidaamal Kai Vidaamal
Thandheerae Maara Um Anbai

Anaithidum En Nalla Deva
Kaaththidum thevai Niraivetrum
Thaangidum endhan Vedhanaiyil
Kavalaai Endrum Kooda Irupeer – 2

1. Endhan Jebam Ketu
Aruginil Odi Vandhu
Kanneer Ellam Thudaithavarae – 2
Endrum Ummodu Nadanthidave than
Ullam Thudikum Yesu deva – 2

Anaithidum…

2. En Mel Ivalavaai
Anbu Veithirukkum
Ummai vitu naan engu poven – 2
Immattum Ennnai Aliyaamal Kaaththa
Ummai Naan Epadi Marapen deva – 2

Anaithidum…

Eliyavin Palibeedathil – எலியாவின் பலிபீடத்தில்

Eliyavin Palibeedathil

எலியாவின் பலிபீடத்தில்
இறங்கின அக்கினியே – எங்கள்
தேசத்திலே (சபைதனிலே) இப்பொழுதே
இறங்கும் தெய்வமே

அபிஷேகம் அபிஷேகமே
இப்போ தாரும் தெய்வமே
அக்கினி அக்கினியாய்
என்னை மாற்றும் தெய்வமே

மோசேயை வனாந்திரத்தில்
சந்தித்த அக்கினியே – என்
வாழ்க்கையையும் உங்க அக்கினியால்
சந்தியும் தெய்வமே (…அபிஷேகம்)

ஏசாயாவை அக்கினியால்
தொட்ட என் தெய்வமே – என்
வாலிபத்தையும் உங்க அக்கினியால்
தொட்டு விடும் தெய்வமே (…அபிஷேகம்)

தாவீதையும் அபிஷேகத்தால்
நிரப்பின தெய்வமே
என் பாத்திரமும் அபிஷேகத்தால்
நிரம்பி வழியணுமே (…அபிஷேகம்)

உலர்ந்து போன எலும்புகளை
உயிர்பித்த அக்கினியே – உலர்ந்து
போன என் வாழ்க்கையையும்
உயிர்ப்பியும் தெய்வமே (…அபிஷேகம்)

Eliyaavin Palibeedathil
Irangina Akkiniye – Engal
Dhesathile (Sabaithanile) Ippozhuthe
Irangum Dheivame

Abishegam Abishegame
Ippo Thaarum Dheivame
Akkini Akkiniyaai
Ennai Maatrum Dheivame

Moseyai Vanaanthirathil
Santhiththa Akkiniye – En
Vaazhkaiyayyum Unga Akkiniyaal
Santhiyum Dheivame (…abishegam)

Yesayaavai Akkiniyaal
Thotta En Dheivame – En
Vaalibaththaiyum Unga Akkiniyaal
Thottu Vidum Dheivame (…abishegam)

Thaaveethaiyum Abishegathaal
Nirappina Dheivame
En Paathiramum Abishegathaal
Nirambi Vazhiyanume (…abishegam)

Ularnthu Pona Elumbugalai
Uyirpiththa Akkiniye – Ularnthu
Pona En Vaazhkkaiyayyum
Uyirppiyyum Dheivame (…abishegam)

 

Aanantha Paadalgal Paadiduven – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

Aanantha Paadalgal Paadiduven

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே

1. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில் — ஆனந்த

2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே — ஆனந்த

3. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள – தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம் — ஆனந்த

4. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் — ஆனந்த

5. அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
போர்பரன் சேவையின் பாக்யமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
கற்புடன் அவர் பனி செய்திடவே — ஆனந்த

6. பரம தேசம் கண்ணில் தெரிகிறதே – எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம் — ஆனந்த

7. கானானின் கரையிதோ காண்கின்றதே – எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்

Aanantha Paadalgal Paadiduven
Enthan Aathuma Nesarai Pugazhnthiduven
Alaichalgal Yaavaium Agala Seithe
Nalla Meychalil Enthanai Magizha Seythey

1. Azhaithavarae Avar Unmaiulloar – Tham
Azhaipathil Vizhippudan Nirutha Valloar
Uzhaithiduvom Miga Vookamudan – Angu
Pizhaithidavae Anbar Samoogamathil

2. Nambikai Atronaai Alaintha Velai
Yesu Naadharen Pakamaai Vanthanarae
Paavangal Paarangal Parakka Seithey
Intha Paarathil Ennai Vetri Sirakka Seithey

3. Jebamathai Ketidum Jeevanulla – Devan
En Pitha Aanathaal Aananthamae
Yeredupom Nam Idhayamathai
Entrum Maaraamal Pathil Tharum Mannaridam

4. Meloga Naadenthan Sonthamathey
Intha Poologa Naatamum Kuraikintrathey
Maayaiyil Manamini Vaithidaamal – Nesar
Kaayamathai Enni Vaazhnthiduven

5. Arputhamaam Avar Nesamathu – Enthan
Porparan Sevaiyin Sogamathu
Parpala Kirubaigal Pagarukintraar – Yezhai
Karpudan Avar Pani Seithidavae

6. Parama Dhesam Kannil Therikirathey – Enthan
Naadharin Thoni Kaathil Ketkindrathey
Kaalamini Illai Unarnthiduvom
Viraivaaga Nam Oottathil Oodiduvom

7. Kaanaanin Karaiyitho Kaankintrathey – Enthan
Naadharin Thoni Kaathil Ketkintrathey
Kaalamini Ilai Unarnthiduvom
Viraivaaga Nam Oottathil Oodiduvom