Ethirpaartha Mudivai Tharupavarae
எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே – 2
யெகோவா யீரே யெகோவா யீரே
எல்லாமே செய்து முடிப்பீர் – 2
பலத்தால் செய்ய முடியாதையா
பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லை ஐயா – 2
பலத்தாலும் அல்ல பராக்கிரமம் அல்ல
உம் ஆவியால் செய்து முடிப்பீர் – 2
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
எப்படியம் செய்து முடிப்பீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
என்வழியாய் செய்து முடிப்பீர்
Kalvaari Raththam Sivappu
கல்வாரி ரத்தம் சிவப்பு விதைகளாய்
இந்த மண்ணில் விழுந்து விருட்சமாயிற்றே
கல்வாரி சத்தம் காற்றின் அலைகளாய்
என் மூச்சில் கலந்து ஜீவன் தந்ததே
அல்லேலூயா அல்லேலூயா
விருட்சம் நல்ல விதைகள் தரும்
விதை விருட்சம் ஆகுமே
மண்ணை தொட்ட சிலுவை விதை
உலகம் எங்கும் பரவிற்றே
விதையாய் நானும் விழுவேன்
அவரில் மீண்டும் எழுவேன்
நிலைத்து நின்று அவரை காட்டுவேன்
சிலுவை தந்த அன்பை இந்த
உலகினிலே விதைக்கிறோம்
அன்பை மட்டும் கனிகளாக
அறுவடைகள் செய்கிறோம்
உலகில் எங்கள் பயணம்
வருகை வரை தொடரும்
விதைத்து அறுத்து மகிழ்ந்து வாழுவோம்
Ye Pisase Poi Sollum Pisase
ஏ பிசாசே பொய் சொல்லும் பிசாசே
போ போ பிசாசே பொய் சொன்னா
விரட்டி விடுவேன்
சாத்தான் உண்மை பேசுமா?
பேசாது பேசாது
சாத்தான் பேச்ச கேட்கலாமா
நோ நோ நோ கேட்கக்கூடாது
இயேசுவ பத்தி தப்பா பேசும்
கூட்டம் ஒன்னு வளருது
வயலுக்குள்ள களயப்போல வேகமாக பரவுது
வசனத்துக்கு புறம்பாக யாரும் எதுவும் சொன்னா
கிளம்பு காத்துவரட்டும் என்று நீ விரட்டி விடணும்
Ye Pisase Poi Sollum Pisase
Po Po Pisasu Poi Sonna
Virati Viduven
Saathaan Unmai Pesumaa ?
Pesaathu Pesaathu
Saathaan Pecha Kekkalaamaa
No No No Kekkakoodaathu
Sittukuruvi Sittukuruvi
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
உயர உயர பறந்து செல்வது அழகோ அழகு
பச்சை மரமும் பச்சை மரமும்
காட்டுக்குள் உயர நிமிர்ந்து நிப்பது அழகோ அழகு
கர்த்தர் இயேசுவ நம்பினா
நாமும் கூட நிலைப்போம்
உயர உயர உயர எழும்புவோம்