என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2
நீர் என் கன்மலை.. என் கோட்டை..
என் ரட்சகர்.. என் தேவன்..
நான் நம்பும் துருகம்.. என் கேடகம்…
உயர்ந்த அடைக்கலம்.. ரட்சண்ய கொம்பு – 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2 (என் கன்மலையானவர்)
1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவா இருந்தீர் – 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2 (என் பெலனாகிய)
2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும் போது நான் அபயமிட்டேன் – 2
உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் – 2 (என் பெலனாகிய)
En Kanmalaiyanavar Thuthikapaduveeraga
En Ratchipin Devan Uyarthapaduveeraga – 2
Neer En Kanmalai.. En Kottai..
En Ratchakar.. En Devan..
Naan Nambum Thurukam.. En Kedakam..
Uyarntha Adaikalam.. Ratchanya Kombu – 2
En Belanagiya Karthavae
Naan Ummil Anbu Kooruvaen – 2 (En Kanmalaiyanavar)
Ethirpaartha Mudivai Tharupavarae
எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே – 2
யெகோவா யீரே யெகோவா யீரே
எல்லாமே செய்து முடிப்பீர் – 2
பலத்தால் செய்ய முடியாதையா
பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லை ஐயா – 2
பலத்தாலும் அல்ல பராக்கிரமம் அல்ல
உம் ஆவியால் செய்து முடிப்பீர் – 2
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
எப்படியம் செய்து முடிப்பீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
என்வழியாய் செய்து முடிப்பீர்
Kalvaari Raththam Sivappu
கல்வாரி ரத்தம் சிவப்பு விதைகளாய்
இந்த மண்ணில் விழுந்து விருட்சமாயிற்றே
கல்வாரி சத்தம் காற்றின் அலைகளாய்
என் மூச்சில் கலந்து ஜீவன் தந்ததே
அல்லேலூயா அல்லேலூயா
விருட்சம் நல்ல விதைகள் தரும்
விதை விருட்சம் ஆகுமே
மண்ணை தொட்ட சிலுவை விதை
உலகம் எங்கும் பரவிற்றே
விதையாய் நானும் விழுவேன்
அவரில் மீண்டும் எழுவேன்
நிலைத்து நின்று அவரை காட்டுவேன்
சிலுவை தந்த அன்பை இந்த
உலகினிலே விதைக்கிறோம்
அன்பை மட்டும் கனிகளாக
அறுவடைகள் செய்கிறோம்
உலகில் எங்கள் பயணம்
வருகை வரை தொடரும்
விதைத்து அறுத்து மகிழ்ந்து வாழுவோம்