Song Tags: Sam P Chelladurai Songs

Podhumaanavare Ellaa – போதுமானவரே எல்லா

Podhumaanavare Ellaa

போதுமானவரே எல்லா
நன்மைக்கும் காரணர் நீரே – 2
அடைக்கலம் உம் நாமமே
புகழிடம் என்றும் நீரே – 2

என் பெலன் நீரே.. என் சுகம் நீரே..
ஜீவன் எனக்கு நீரே – 2
என் ஞானம் நீரே.. என் நீதி நீரே..
பரிசுத்தம் மீட்பும் நீரே – 2

சிறகுகளின் நிழல்தனிலே
ஆரோக்கியம் எனக்கு உண்டே – 2
உம் தழும்புகளால் சுகமானேன்
நீரே என் பெலனானீர் – 2 (என் பெலன் நீரே)

உம் சமூகத்திலே பேரானந்தமே
மகிழ்ச்சியும் புகழ்ச்சியுமே – 2
உம் பிரசன்னத்தில் மலைகளும்
மெழுகுப்போல் உருகிடுமே – 2 (என் பெலன் நீரே)

உம் வசனத்தின் வெளிச்சத்திலே
வாழ்ந்திடுவேன் என்றுமே – 2
உம் வார்த்தையின் வல்லமையால்
என் வாழ்வு செழித்திடுதே – 2 (என் பெலன் நீரே)

நன்மையும் கிருபையுமே
என்னை பின்தொடரும் – 2
நான் கர்த்தரின் வீட்டினிலே
நீடித்து நிலைத்திருப்பேன் – 2 (என் பெலன் நீரே)

Podhumaanavare Ellaa
Nanmaikkum Kaaranar Neere – 2
Adaikalam Um Naamame
Pugazhidam Endrum Neere – 2

En Belan Neere.. En Sugam Neere..
Jeevan Enaku Neere – 2
En Gnanam Neere.. En Needhi Neere..
Parisuththam Meetpum Neere – 2

Siragugalin Nizhalthanile
Aarokkiyam Enaku Unde – 2
Um Thazhumbugalaal Sugamaanen
Neere En Belanaaneer – 2 (En Belan Neere)

Um Samoogathile Peraananthame
Magizhchiyum Pugazhchiyume – 2
Um Prasannathil Malaigalum
Mezhugupol Urugidume – 2 (En Belan Neere)

Um Vasanathin Velichathile
Vaazhnthiduven Endrume – 2
Um Vaarthayin Vallamayaal
En Vaazhvu Sezhithiduthe – 2 (En Belan Neere)

Nanmayum Kirubayume
Ennai Pinthodarum – 2
Naan Kartharin Veetinile
Needithu Nizhaithirupen – 2 (En Belan Neere)

Malaigal Vilagiponalum – மலைகள் விலகி போனாலும்

Malaigal Vilagiponalum

மலைகள் விலகிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் – 2
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே – 2

1. என்னை விட்டு விலகாத ஆண்டவர்
என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்- 2
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர் – 2 (…மலைகள்)

2. யெகோவா நிசி எந்தன் ஜெயமானவர்
யெகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் – 2
என் வாழ்வின் நம்பிக்கையானவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர் – 2 (…மலைகள்)

3. யெகோவா ராஃபா எந்தன் சுகமானவர்
யெகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் – 2
வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர் – 2 (…மலைகள்)

Malaigal Vilagi Ponaalum
Parvathangal Peyarnthuponaalum – 2
Avar Kirubai Avar Irakkam
Maaraathu Enthan Vaazhvile – 2

1. Ennai Vittu Vilakaatha Aandavar
Ennai Orupothum Kaividaatha Snekithar – 2
Enakaaga Jeevan Thantha Ratchakar
En Vaazhvil Entrum Pothumaanavar – 2 (…Malaigal)

2. Yagova Nisi Enthan Jeyamaanavar
Yagova Shammaa Ennodu Irupavar – 2
En Vaazhvin Nambikaiyaanavar
En Vaazhvil Entrum Pothumaanavar – 2 (…Malaigal)

3. Yagova Raafhaa Enthan Sugamaanavar
Yagova Roova Enthan Meiparaanavar – 2
Vazhuvaamal Ennai Entrum Kaappavar
En Vaazhvil Entrum Pothumaanavar – 2 (…Malaigal)

Nallavar Neer Migavum – Naan Uyirodu Irukum – நான் உயிரோடு இருக்கும்

Nallavar Neer Migavum
நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் – 2

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2