Nallavar Neer Migavum
நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2
எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் – 2
உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே
உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே
உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே
உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
PRAISE THE LORD. I WANT DIS LYRICS IN ENGLISH TO SING.
Hi dear bro if you can attach a small audio songs clip of the same it will be very much useful to no the tune .
Super thank you Jesus you give more wisdom i blessings mr. Thomas Prithviraj i blesse you brother very nice lyrics beautiful song i glory to jesus
I bless you in the name of Lord Jesus