Song Category: Tamil

Menmai Edhu – மேன்மை எது தேவ ஊழியமே

Menmai Edhu

மேன்மை எது? தேவ ஊழியமே
மேன்மை எது? தேவ ஊழியமே
இருப்பதோ கொஞ்ச காலம்
அதை தேவனுக்கென்று கொடு
இருப்பதோ ஒரு வாழ்க்கை
அதை இயேசுவுக்கென்று கொடு

மேன்மை எது? தேவ ஊழியமே
மேன்மை எது? தேவ ஊழியமே

பதவி இருக்கும் வரை
அந்த பதவியால் உனக்கு மேன்மை
செல்வம் இருக்கும் வரை
அந்த செல்வத்தினால் உனக்கு மேன்மை
பதவி மாறாதிருக்குமோ? சிந்தித்து பார் இன்றே
செல்வம் என்றும் நிலைக்குமோ? புரிந்துகொள் இன்றே

மேன்மை எது? தேவ ஊழியமே
மேன்மை எது? தேவ ஊழியமே

இளமை இருக்கும் வரை
அந்த அழகினால் உனக்கு மேன்மை
திறமை இருக்கும் வரை
வரும் புகழ்ச்சியால் உனக்கு மேன்மை
இளமை மாறாதிருக்குமோ? சிந்தித்து பார் இன்றே
திறமை மறையாதிருக்குமோ? புரிந்துகொள் இன்றே

மேன்மை எது? தேவ ஊழியமே
மேன்மை எது? தேவ ஊழியமே

வாலிபம் இருக்கும் வரை
அந்த பெலத்தினால் உனக்கு மேன்மை
ஜீவன் இருக்கும் வரை
இந்த மேன்மையெல்லாம் உனக்கு மேன்மை
ஒரு நாள் உன் ஜீவன் போகுமே
தேவனும் ஒரு நாள் வருவாரே
உன்னிடம் கணக்கு கேட்டிட்டால்
அன்று பதில் என்ன சொல்வாய்? ஏ ஏ …

ஊழியமே கர்த்தருக்குள் மேன்மையே
ஊழியமே கர்த்தருக்குள் மேன்மையே

இருப்பதோ கொஞ்ச காலம்
அதில் ஆத்துமாக்கள் வெல்வோம்
இருப்பதோ ஒரு வாழ்க்கை
அதை உண்மையாய் கழித்திடுவோம்

ஊழியமே கர்த்தருக்குள் மேன்மையே
ஊழியமே கர்த்தருக்குள் மேன்மையே

Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae
Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae
Irupadhoa Konja Kaalam
Adhai Dhaevanukendru Kodu
Irupadhoa Oru Vaazhkai
Adhai Yaesuvukendru Kodu

Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae
Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae

Padhavi Irukkum Varai
And Padhaviyaal Unaku Maenmai
Selvam Irukum Varai
Andha Selvathinaal Unaku Maenmai
Padhavi Maaraadhirukumoa? Sindhithu Paar Indrae
Selvam Endrum Nilaikumoa? Purindhukol Indrae

Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae
Maenmai Edhu ? Dhaeva Oozhiyama

Ilamai Irukkum Varai
Andha Azhaginaal Unaku Maenmai
Thiramai Irukum Varai
Varum Pugazhchiyaal Unaku Maenmai
Ilamai Maaraadhirukumoa? Sindhithu Paar Indrae
Thiramai Maraiyaadhirukumoa? Purindhukol Indrae

Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae
Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae

Vaalibam Irukkum Varai
Andha Belathinaal Unaku Maenmai
Jeevan Irukum Varai
Indha Maenmaiyellaam Unaku Maenmai
Oru Naal Un Jeevan Poagumae
Dhaevanum Oru Naal Varuvaarae
Unnidam Kanakku Kaetittaal
Andru Badhil Enna Solvaai? Ae Ae …

Oozhiyamae Kartharukkul Maenmai
Oozhiyamae Kartharukkul Maenmai

Iruppadhoa Konja Kaalam
Adhil Aathumaakal Velvoam
Iruppadhoa Oru Vaazhkai
Adhai Unmaiyaai Kazhithiduvoam

Oozhiyamae Kartharukkul Maenmai
Oozhiyamae Kartharukkul Maenmai

Aaraindhu Mudiyadha Adhisayam Seidhavar – ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்தவர்

Aaraindhu Mudiyadha Adhisayam Seidhavar

ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்தவர்
அளவிட முடியாத அன்பு வைத்தவர்
எண்ணி முடியாத இரக்கம் எண்ணில் களித்தவர்
என்னையே கவர்ந்து கொண்ட நேசர் பெரியவர்
எல்லை இல்லா நன்மைகளை எனக்கும் என்றும் செய்தவர்
எண்ணிலடங்கா கிருபை எனக்கு ஈந்தவர்
ஏற்றம் இறக்கத்தினில் என் கூட வந்தவர்
என் பெயரை உள்ளங்கையில் வரைந்து கொண்டவர்

உம்மை போல நான் உலகில் கண்டதில்லை
உம்மை போல ஒரு நேசர் நான் இனியும் காண்பதில்லை (2)

ஒண்ணுமில்லா என்னையே உண்மையாய் நேசிக்க
உம போல தெய்வம் இங்கு யாரும் இல்லையே
உறவுகள் மறந்தாலும் மாறாத நேசரே
உம் அன்புக்கு ஈடு இணை இல்லையே
பாடுகள் என்னையே சூழ்ந்து நின்றாலும்
படைத்தவர் நீர் என்னோடு பயம் இல்லையே
இரதங்களும் குதிரைகளும் என் பின் தொடர்ந்தாலும்

உம்மை போல நான் உலகில் கண்டதில்லை
உம்மை போல ஒரு நேசர் நான் இனியும் காண்பதில்லை (2)

மண்ணான என்னையே மகனாய் அழைத்தவர் நீர்
நன்மையான ஈவுகளை எனக்கு தந்தீரே
என்னை சுகமாக்க நீர் காயப்பட்டீரே
உம உயிர் கொடுத்து எனக்கு ஜீவன் தந்தீரே
பாதை எல்லாம் உம் தூதர்கள் கொண்டு என்னை
கால் கல் இடறாமல் காத்து கொண்டீரே
எனக்காய் பரிந்து பேசி நாட்களை கூட்டி தந்து
நித்தம் ஒரு புது நாளை காண செய்தீரே

உம்மை போல நான் உலகில் கண்டதில்லை
உம்மை போல ஒரு நேசர் நான் இனியும் காண்பதில்லை (2)

Aaraaindhu Mudiyaadha Adhisayam Seidhavar
Alavidaa Muidyaadha Anbu Vaithavar
Enni Mudiyaadha Irakkam Ennil Kalithavar
Ennaiyae Kavarndhu Konda Naesar Periyar
Ellai Illaa Nanmaigalai Enakku Endrum
Seidhavar
Enniladangaa Kirubai Enakku Eendhavar
Aetram Irakkathinil En Kooda Vandhavar
En Peyarai Ullangaiyil Varaindhu Kondavar

Ummai Poala Oru Dheivam Naan Ulagil Kandadhillai
Ummai Poala Oru Naesar Naan Iniyum Kaanbadhillai (2)

Onnumillaa Ennaiyae Unmaiyaai Naesikka
Um Poala Dheivam Ingu Yaarum Illaiyae
Uravugal Marandhaalum Maaraadha Naesarae
Um Anbukku Eedu Inai Illaiyae
Paadugal Ennaiyae Soozhndhu Nindraalum
Padaithavar Neer Ennoadu Bayam Illaiyae
Radhangalum Kuthiraigalum En Pin Thodarndhaalum
Sengadal Pilandhavar Neer Enakku Munnae

Ummai Poala Oru Dheivam Naan Ulagil Kandadhillai
Ummai Poala Oru Naesar Naan Iniyum Kaanbadhillai (2)

Mannaana Ennaiyae Maganaai Azhaithavar Neer
Nanmaiyaana Eevugalai Enakku Thandheerae
Ennai Sugamaakka Neer Kaayappatteerae
Um Uyir Koduthu Enakku Jeevan Thandheerae
Paadhai Ellaam Um Thoodhargal Kondu Ennai
Kaal Kal Idaraamal Kaathu Kondeerae
Enakkaai Parindhu Paesi Naatkalai Kooti Thandhu
Nitham Oru Pudhu Naalai Kaana Seidheerae

Ummai Poala Oru Dheivam Naan Ulagil Kandadhillai
Ummai Poala Oru Naesar Naan Iniyum Kaanbadhillai (2)

Enna Ennaku Illamal Poonallum – என்ன எனக்கு இல்லாமற் போனாலும்

Enna Enakku Illamal Poonalum

என்ன எனக்கு இல்லாமல் போனாலும்
உம் கிருபை எனக்கு போதுமைய்யா
அன்னந்தண்ணி ஆகாரம் இல்லாமல் போனாலும்
உம் மகிமை எனக்கு போதுமைய்யா
என் இயேசு நாதா
உம் மகிமை எனக்கு போதுமைய்யா

சுற்றத்தாரும் உற்றத்தாரும் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே
தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்
உள்ளகையில் என்னை வரைந்தீரே
உம் மகனாக மாற்றி விட்டீரே

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பட்டினியாக கிடைக்கும்
உம்மை நம்பினோருக்கு குறைவுமில்லையே
எளியவனை நீர் மறப்பதில்லை
நம்பினோரை கைவிடுவதில்லை
அவன் உம்மை விட்டு விலகுவதில்லை

உயர்வே ஆனாலும் தாழ்வே ஆனாலும்
அன்பை என்னில் பிரிப்பதில்லையே
மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும்
நீரின்றி எவரும் இல்லையே
உம் துணை இன்றி வாழ்வு இல்லையே

Periyavar En Yesu – பெரியவர் என் இயேசு

Periyavar En Yesu
பெரியவர் என் இயேசு
என் இயேசு பெரியவரே
எந்த சூழ்நிலைகள் மாறினாலும்
என் இயேசு பெரியவரே
பெரியவர் என் இயேசு
என் இயேசு உயர்ந்தவரே
தொல்லை சோதனைகள் சூழ்ந்தாலும்
எந்தன் இயேசு பெரியவரே

மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும்
உலகில் இருப்பவனை பார்க்கிலும்
என்னில்வசிக்கும்
என் இயேசு பெரியவரே
இதயம் கலங்கும் போதும்
என் இயேசுபெரியவரே
எந்த சூழ்நிலைகள் மாறினாலும்
என் இயேசு பெரியவரே

கோலியாத்தைப் போன்ற
தடைகள் நீங்கிடும்
இயேசு நாமத்தால் யோர்தான்
பிளந்து வழி விலகிடும்
காரிருளின் வேளைகள்
என்னை சூழ்ந்தாலும்
எந்த சூழ்நிலைகள் மாறினாலும்
என் இயேசு பெரியவரே

Kiruba Illama Naan – கிருபை இல்லாம நான்

Kiruba Illama Naan
கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாது
உங்க கிருபையால் நான் வாழ்கிறேன்
உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன்

எல்லாம் கிருபையே
எல்லாம் கிருபையே
எல்லாம் கிருபையே
எல்லாம் கிருபையே -2
நான் நிற்பதும் கிருபையே
நான் நடப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து சுகமுடன் இருப்பது எல்லாம் கிருபையே

1.மனுஷனை திருப்தி படுத்த முடியாது
அவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே
எதிர்பார்ப்பும் அதிகம் தானோ அன்போ கொஞ்சம்
அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாது
-எல்லாம் கிருபையே

2. வாழ்க்கையில் உயரும் போது மறக்காதே
அங்கிருந்து விழும் போதும் கலங்காதே
துதிப்பவனும் அவனே மிதிப்பவனும் அவகினே
மனிதன் மனிதன் மனிதன் அவனே
-எல்லாம் கிருபையே
Kiruba Illama Naan Uyir Vaazhave Mudiyathu
Unga Kirubayal Naan Innum Vazhgiren
Unga Kirubayal Naan Nilai Nirkiren -2

Ellam Kirubaiye Ellam Kirubaiye Ellam Kirubaiye Ellam Kirubaiye -2
Naan Nirpathum Kirubaiye
Naan Nilaipathum Kirubaiye
Naan Uyirudan Vazhanthu Sugamudan Irupathu Ellam Kirubaiye

1. Manushanai Thirupthi Padutha Mudiyathu
Avanukai Un Vazhkaiyai Illakathe
Ethirparpum Athigam Thaano Anbo Konjum
Avanal Un Vazhkai Ezhutha Mudiyathu – Ellam Kirubaiye

2. Vazhkaiyil Uyarum Pothu Marakathe
Angirunthu Vizhum Pothum Kalangathae
Thuthipavanum Avanae Midhipathuvum Avanae Manidhan Manidhan Manidhan Avanae – Ellam Kirubaiye

Thuthigal Mathiyil Vaasam – துதிகள் மத்தியில் வாசம்

Thuthigal Mathiyil Vaasam
துதிகள் மத்தியில் வாசம் செய்கிறீர் ஸ்தோத்திரம்
தூயாதி தூயவரே ஸ்தோத்திரம்

1. எனக்குள்ளே இருப்பவரே ஸ்தோத்திரம்
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
காயப்படுத்தும் கள்வர் நடுவில்
காயங்கட்டும் கர்த்தர் உண்டு
கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்
(துதிகள் மத்தியில்…….)

2. பயப்படாதே என்றவரே ஸ்தோத்திரம்
நீ திகையாதே என்றவரே ஸ்தோத்திரம்
அக்கினி நடுவே நடந்தாலும்
சிங்கக்கெபியில் விழுந்தாலும்
நான் உன்னோடு என்றவரே ஸ்தோத்திரம்
(துதிகள் மத்தியில்…….)

3. வாக்குத்தத்தம் தந்தவரே ஸ்தோத்திரம்
வார்த்தையாலே நடத்துகிறீர் ஸ்தோத்திரம்
வாதை நோயும் வந்தாலும்
Lock down ஆகி நின்றாலும்
வழி நடத்திய தேவனே ஸ்தோத்திரம்
(துதிகள் மத்தியில்…….)

Yehovah Devane Aarathanai- யெகோவா தேவனே ஆராதனை

Yehovah Devane Aarathanai

யெகோவா தேவனே ஆராதனை
யெகோவா நிசியே ஆராதனை
யெகோவா யீரே ஆராதனை
யெகோவா ஷம்மா ஆராதனை

எல்ஷடாய், எல்ஷடாய்
சர்வவல்லவரே நன்றி ஐயா

1. யெகோவா ரூவா ஆராதனை
யெகோவா ஏலோஹிம் ஆராதனை
யெகோவா ஸிட்கேனு ஆராதனை
யெகோவா மெக்காதீஸ் ஆராதனை

எல்ரோயீ, எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா

2. யெகோவா ஏலியோன் ஆராதனை
யெகோவா ஓசேனு ஆராதனை
யெகோவா ஏலோகே ஆராதனை
யெகோவா ரொஃபேக்கா ஆராதனை

அடோனாய், அடோனாய்
ஆளுகை செய்பவரே நன்றி ஐயா

Kalangidum Nerathile – கலங்கிடும் நேரத்திலே உன் கண்ணீரை

Kalangidum Nerathile
கலங்கிடும் நேரத்திலே,
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
திக்கற்ற பிள்ளையை விசாரிப்பவர்,
உன்னையும் விசாரிப்பாரே

காப்பார் உன்னை காப்பார்
கண்ணின் மணிபோல் உன்னை காப்பார்

1. உலகத்தின் செல்வங்கள் நிலைநிற்குமோ
உன்னதரின் அன்புக்கு ஈடாகுமோ
திரண்ட ஆஸ்தியும், உயர் கல்வியும்
நிலையான சமாதானம் தந்திடுமோ

வருவாயா, இதயம் தருவாயா?
இயேசு உன்னை அழைக்கிறார்

2. நீ நம்பும் சொந்தம் உன் கூட வருமோ?
நம்பிக்கைக்கு உரியவர் இயேசு தானே
மேலான பதவியும், அதிகாரம் இருப்பினும்
அவையெல்லாம் நிரந்தரமாகிடுமோ?

நம்பி வா, தேடி ஓடி வா,
நிரந்தரம் அவரே, நிம்மதியும் அவரே

3. நிலையான நகரம் இங்கில்லையே
நிரந்தரம் நமக்கு பரலோகமே
நீ காணும் யாவும் நிலையானதல்ல
நித்திய ஜீவனை நாடிடுவாய்

இயேசுவே வழி, சத்தியம்
ஜீவனும் அவரே, சமாதானம் அவரே

Unnathangalil Ummodu Ulaavida – உன்னதங்களில் உம்மோடு உலாவிட

Unnathangalil Ummodu Ulaavida
உன்னதங்களில் உம்மோடு உலாவிட

நீர் என்னோடு வந்து எனக்குள் வசிக்கின்றீரே
நீர் உன்னதமானவரே,
உம் அன்புக்கு நிகர் இல்லையே

அல்லேலூயா (4)

1. எனக்காக ஜீவன் தந்து,
என்னையும் தேடி வந்து
அன்போடு அணைத்தவரே
என்னை உமக்காக தெரிந்து கொண்டீரே
(உன்னதங்களில் …)

2. ஆவியான தெய்வம்,
ஆலோசனை கர்த்தர்
அதிசயம் செய்கின்றீர்
என்னை அனுதினம் நடத்துகிறீர்
(உன்னதங்களில் …)

3. உம்மை நேசித்து,
உம் சித்தம் செய்து
உம்மோடு நடக்கணுமே
நானும் உம்மைப்போல் மாறணுமே
(உன்னதங்களில் …)

4. பாவியான என்னை பரிசுத்தமாக்கிட
பரலோகம் விட்டு வந்தீர்
எந்தன் பரிகார பலியானீர்
எந்தன் பரிகாரியாய் மாறினீர்
(உன்னதங்களில் …)

Maasillaatha Anbu Nesarey – மாசில்லாத அன்பு நேசரே

Maasillaatha Anbu Nesarey
மாசில்லாத அன்பு நேசரே,
மகிமை என்றும் உமக்கே (2)
அன்பின் ஆவியினால் என்னை நிறைத்தவரே,
உம்மை ஆராதிப்பேன் என்றுமே (2)

{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2)

1. செடியே, உம்மில் நிலைத்திட,
கொடியாய் உம்மில் படர (2)
உந்தன் ஜீவத்தண்ணீர் என்னில் ஊற்றிடுமே
நானும் மிகுந்த கனி தந்திட (2)
{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2)

2. உம்மையே என்றும் சேவிக்க,
உந்தன் அன்பை இன்னும் ருசிக்க (2)
நேச ஆவியினால் என்னை அனல்மூட்டுமே,
நேச மணவாட்டியாய் மாறிட (2)
{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே }(2)

3. சித்தமே, நான் செய்திட,
தத்தமே செய்தேன் என்னையே (2)
கொஞ்ச காலமேதான் பாடு சகிப்பதினால்,
நானும் பொன்னாக துலங்கிடுவேன் (2)
{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2)