Song Category: Tamil

Yesuvin Naaman Aathisayamaame- இயேசுவின் நாமம் அதிசயமாமே

Yesuvin Naaman Aathisayamaame

இயேசுவின் நாமம் அதிசயமாமே
என்றென்றும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்
என்னை விசாரிக்கும் அன்புள்ள இயேசுவே
எப்போதும் என்னுள்ளம் ஜீவிக்கின்றார்

1. காடு மலையும் மேடானாலும்
கர்த்தரே வழிகாட்டி நடத்தினார்
இம்மானுவேல் அவா என்னோடிருந்துமே
இம்மட்டும் காத்ததால் ஸ்தோத்திரிப்பேன்

2. போக்கும் வரத்தும் ஆபத்திலும்
காக்கும் தம் பலமான கரங்களே
நம்பிடுவேனே நான் அண்டிடுவேன் நித்தம்
நன்றி மறவாமல் ஸ்தோத்திரிப்பேன்

3. நிந்தை சுமந்த நேரங்களில்
தந்தை தம் பெலமீந்து தேற்றினாரே
என்னென்ன துன்பங்கள் இன்னும்
வந்தாலுமே – மென்மேலும்
இயேசுவை ஸ்தோத்திரிப்பேன்

4. சோதனையான வியாதிகளில்
வேதனை மரண படுக்கையிலும்
சித்தம் நிறைவேற முற்றும் குணமாக்கி
ஜீவன் அளித்ததால் ஸ்தோத்திரிப்பேன்

5. பாக்கியமான இரட்சிப்புமே
பெற்றேன் இக்கனமான அழைப்புமே
ஆனந்த தைலத்தின் வல்ல அபிஷேகம்
அன்போடு ஈந்ததால் ஸ்தோத்திரிப்பேன்

Um Anbin Kayitraal – உம் அன்பின் கயிற்றால்

Um Anbin Kayitraal

உம் அன்பின் கயிற்றால்
என்னை இழுத்தீர்
உம் அணைக்கும் கரத்தால்
என்னை அணைத்தீர்

எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்
கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
கரத்தின் நிழலினாலே என்னைமூடினீர்

1. குப்பையில் இருந்தேன் இயேசுவே உந்தன்
கரத்தால் தூக்கி எடுத்தீர்
உந்தனின் அன்பின் அடையாளமாகவே
என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே

2. முடியாது (நடக்காது) என்றேன் வார்த்தையை தந்தீர்
உம்மீது நம்பிக்கை வைத்தேன்
ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்
உந்தனின் சாட்சியாய் என்னை நீர் நிறுத்தினீர்

Um Anbin Kayitraal Ennai Izhuththeer
Um Anaikkum Karathal Ennai Anaitheer

Etharkkumae Udhavaatha Ennai Thedi Vantheer
Ettaatha Uyaraththilae Ennai Kondu Vantheer
Kanmalayin Maraivukkullai Ennai Niruththineer
Karaththin Nizhalinaalae Ennai Moodineer

1. Kuppayil Irunthaen Yesuvae – Unthan
Karaththaal Thookki Eduththeer
Unthan Anbin Adayaalamagavae
Ennai Neer Niruththineer Ulagirku Munnalae

2. Mudiyaathu (Nadakkathu) Endraen Vaarthayai Thantheer
Um Meethu Nambikkai Vaithaen
Yetra Kalaththil Niraivetri Kanbiththeer
Unthanin Saatchiyaai Ennai Neer Niruththineer

Ullamaarnda Nandri – உளமார்ந்த நன்றி சொல்கிறேன்

Ullamaarnda Nandri
உளமார்ந்த நன்றி சொல்கிறேன்
உள்ளம் நிறைவுடன்
நான் உம்மை பாடுவேன் (2)
உளமார்ந்த நன்றி சொல்கிறேன்…

1. வியாதியோடு தேடி வந்தேன்
சுகமானாய் என்று சொன்னீர்
போகும் வழியிலே
சுகமானேன் (2)
நன்றி சொல்ல திரும்பி வந்தேன்
உம்மை நான் மகிமைப்படுத்துவேன் (2) – உளமார்ந்த

2. தூரமாய் போனேனே சேதம் ஆனேனே
திரும்பி வந்து என்னை அணைத்தீரையா (2)
மன்னித்து ஏற்று கொண்டீர்
என்னை மறுபடி மகிழச் செய்தீர் (2) – உளமார்ந்த

3. அதிக பிரயாசத்தால்
பலன் ஒன்றும் கிடைக்கவில்லை
வலையில் எதுவும் அகப்படவில்லை
அதிக பிரயாசத்தால்
பலன் ஒன்றும் கிடைக்கவில்லை
வாழ்க்கையில் ஒன்றும் நடைபெறவில்லை
நீர் ஒரு வார்த்தை சொன்னதினால்
என் படகு நிரம்பி வழிந்தது
நீர் ஒரு வார்த்தை சொன்னதினால்
என் வாழ்வு வளமானது – உளமார்ந்த

நன்றி ஐயா… இயேசுசைய்யா… நன்றி ஐயா (2)

Naan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்லவில்லையா

Naan Unaku Solla Villaiya
நான் உனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தால் என் மகிமையை
காண்பாய் என்று சொல்லவில்லையா

வாக்குப்பணினவர் நானே
வாக்குமாறிட மாட்டேனே
சொன்னதை செய்யுமளவும் கைவிடமாட்டேன் உன்னை
கைவிடமாட்டேன் உன்னை
நாறிப்போன உன் வாழ்வை நறுமணமாக்கிடுவேன்
வியாதியில் கிடந்த உன் உடலை சொஸ்தப்படுத்துவேன்

Nan unaku solla villaiya
Nee visuvasithal en magimaiyai kanbai entru solla villaiya
Vaaku panninavar naane
Vaaku maarida maatanae
Sonnathai seiyumalavum Kaivida maataen unnai
Kaivida mataen unnai

Naaripona un vazhvai narumana maakiduven
viyathiyil kidantha un udalai
Swasthapaduthiduven
Kalangina un kangal ini azha thevai illai
uyirthezhuthalum jeevanumai unakul irukiren

Vaaivittu ketathellam unaku thanthituven
un manathin virupangalai niraivetri magizhnthiduven
En paadham amardhu nee enakaga kathirundhal
Puthiku ettatha kaariyam seithiduven

Bayapadathe bayapadathe marupadi sollukiren
Thigaiyathe thigaiyathe thirumbavum koorukiren
Unnodu Naan iruppathal unnil Naan magimai ataikintraen

Neer enaku solla villaya
Nee visuvasithal en magimaiyai kaanbai entru solla villaiya

Vaakku panninavar naane vaakku maarida matene
Sonnathai seyumalavum Kaivida maateer ennai
Kaivita maateer ennai.

Paadhukaappar Nerukadiyil – பாதுகாப்பார் நெருக்கடியில்

Paadhukaappar Nerukadiyil

பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே-2
துணையாய் வருவார்
உதவி செய்வார்-2

கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

நம் துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொண்டார்-2
நாம் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றார்-2

கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

இதயம் விரும்புவதை
நமக்கு தந்திடுவார்-2
(நம்) ஏக்கங்கள் அனைத்தையும்
செய்து முடித்திடுவார்-2

கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
வரும் எழுப்புதல் நாம் காண்போம்-2
நம் தேவன் நாமத்தினால்
கொடியேற்றி கொண்டாடுவோம்-2

கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

பாதுகாத்தீர் நெருக்கடியில்
பதில் தந்தீர் ஆபத்திலே-2
துணையாய் வந்தீர்
உதவி செய்தீர்-2

நன்றி ஐயா நன்றி ஐயா-2

துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக் கொண்டீர்-2
நான் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றீர்-2

நன்றி ஐயா நன்றி ஐயா-4

Vaazhthugiren Yesu Naadha – வாழ்த்துகிறேன் இயேசு நாதா

Vaazhthugiren Yesu Naadha
வாழ்த்துகிறேன் இயேசு நாதா
வாழ்த்துகிறேன் இக்காலையிலே
வாழ்த்துகிறேன் இயேசு நாதா
வாழ்த்துகிறேன் இவ்வேளையிலே

அற்புதமாய் இரா முழுதும்
அடியேனைக் காத்தீரே

1. உமது செட்டை நிழலதிலே
படுத்திருந்தேன் இரா முழுதும்
உமது கரம் அணைத்திடவே
ஆறுதலாம் நித்திரையும்

2. நித்திரையை இன்பமாக்கி
பத்திரமாய் இருதயத்தை
சுத்தமான இரத்தத்திற்குள்
சுத்தமாக வைத்திருந்தீர்

3. பலவிதமாம் சோதனைகள்
எமை சூழச் வந்திருந்தும்
ஒன்றும் எமை அணுகிடாமல்
அன்புடனே பாதுகாத்தீர்

4. சந்தீப்பீரே இக்காலைதனில்
தந்திடவே திருவரங்கள்
சந்தோஷமாய்ப் பகல் முழுதும்
ஆவிகுள் யான் பிழைக்க

5. தந்திடுவீர் அபிஷேகம்
புதிதாக இப்புது நாளில்
நடத்திடுவீர் ஆவியினால்
உமது திருச் சித்தமதில்

6. பாவமென்றும் அணுகிடாமல்
பரிசுத்தமாம் பாதை செல்ல
தேவையான சர்வாயுதங்கள்
தாரும் ஜெப ஆவியுடன்

7. படைக்கிறேன் என் இருதயத்தை
பலிபீடத்தில் முற்றுமாக
கண்களுடன் செவியோடு
வாயும் கையும் காலுமாக

8. நேசரே உம் திருவருகை
இந்நாளில் இருந்திடினும்
ஆசையுடன் சந்திக்கவே
ஆயத்தமாய் வைத்துக்கொள்ளும்

Athuma Nesarodu Anbin – ஆத்ம நேசரோடு அன்பின்

Athuma Nesarodu Anbin

ஆத்ம நேசரோடு அன்பின் ஆழம் சென்று
ஆவலோடே நான் கெஞ்சிக்கேட்ட போது – 2
அபிஷேக நதி என்னில் பாய்ந்து வந்தது
ஆனந்தத்தினால் என்னை அபிஷேகித்தார் – 2

அன்பே நிரப்பும் உயிரே நிரப்பும்
பெலனே நிரப்பும் இனிதே நிரப்பும் – 2

1. ஆத்ம நேசரோடு உன்னதங்கள் சென்று
மெய் மறந்து நான் அவர் மார்பில் சாய்ந்த போது – 2
மகிமையின் ஒளியை என் மேல் வீசச் செய்தார்
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் துள்ளுதே – 2 (…அன்பே)

2. ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே
இக்காலத்து பாடுகள் ஓய்ந்தொழிந்து போகும் – 2
மகிமை மகத்துவம் என்னை மூடிக்கொள்ளும்
மறுரூபமாவேன் என் நேசர் சாயலாய் – 2 (…அன்பே)

3. தேவ ஜனத்தோடே நித்ய நித்யமாக
ஆராதிப்பேனே என் நேசர் இயேசுவை – 2
தூதர் பாடும் தேசம் என் சொந்தமான தேசம்
கண்ணீரில்லையே இனி கவலையில்லையே – 2 (…அன்பே)

4. ஆவியானவரே நன்றி நன்றி நன்றி
அக்கினியினால் என்னை நிறைத்திட்டீரே – 2
இன்னும் வேண்டும் என்று கெஞ்சுதே என் ஆவி
நிரப்பும் நிரப்பும் என்று உள்ளம் ஏங்குதே – 2 (…அன்பே)

Aathma Nesarodu Anbin Aazham Sendru
Aavalode Naan Kenjik Kettapodhu – 2
Abishega Nadhi Ennil Paaindhu Vandhadhu
Aanandhaththinaal Ennai Abishehiththaar – 2

Anbe Nirappum Uyire Nirappum
Belane Nirappum Inithe Nirappum – 2

1. Aathma Nesarodu Unnadhangal Sendru
Meimarandhu Naan Avar Maarbil Saaindha Podhu – 2
Magimaiyin Oliyai En Mel Veesachcheidhar
Magizhchchiyinaal Endhan Ullam Thulludhe – 2 (…Anbe)

2. Aathma Nesarodu Agamagizhvene
Ikkalaththuppaadugal Oindhozhindhu Pogum – 2
Magimai Magaththuvam Ennai Moodikkollum
Maruroobamaaven En Nesar Saayaalai – 2 (…Anbe)

3. Deva Janaththode Nithya Nithyamaaga
Aaradhippene En Nesar Yesuvai – 2
Thoodhar Paadum Desam En Sondhamaana Desam
Kanneer Illaiye Ini Kavalai Illaiye – 2 (…Anbe)

4. Aaviyanavare Nandri Nandri Nandri
Akkiniyinaal Ennai Niraiththiteere – 2
Innum Vendum Endru Kenjuthe En Aavi
Nirappum Nirappum Endru Ullam Yenguthe – 2 (…Anbe)

 

Anantha Thuthi Oli Ketkum – ஆனந்த துதி ஒலி கேட்கும்

Anantha Thuthi Oli Ketkum

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் – ஆ… ஆ…

1. மகிமைப் படுத்துவே னென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்று உயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிடமாட்டோம்
கறையில்லா தேவனின் வாக்கு – ஆ (2)

2. ஆதிநிலை ஏகிடுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோமே
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறைவாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் – ஆ (2)

3. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாகத் தேவன் அருள்வார் – ஆ (2)

4. ஆறாத காயங்கள் ஆறும்
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல்நாதர்
போற்றியே பாதம் பணிவோம்
அனாதி தேவனே அடைக்கலம் பாரினில்
அனாதையாவதே இல்லை – ஆ (2)

5. பார்போற்றும் தேவன் நம் தேவன்
பாரினில் வேறில்லை பாக்கியம்
நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே
வேறென்ன வாழ்வினில் வேண்டும்
பிள்ளைகளும் சபையும்
பிதாமுன்னே நிலைக்கும்
பரிசுத்த மாளிகை எழும்பும் – ஆ (2)

6. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் – ஆ (2)

7. தாவீதின் மைந்தன் தலையவர்
தாசரின் தலைகள் வணங்கும்
தேடிடும் தாசரின் கனம்
தேவாதி தேவனின் தியானம்
தலைவர்கள் எழுவார் எளியோறும் உயர்வார்
பணியாளர் திரண்டெழும் ஆண்டு – ஆ (2)

Aanandha Thuthi Oli Ketkum
Aadal Paadal Sathamum Thonikkum
Aagaya Vinmeenai Avar Janam Perugum
Aandavar Vaakku Palikkum

1. Magimaipaduthu venendraarey
Magibanin Paasam Perithey
Mangaatha Pugazhudan Vaazhvom
Maatchi Petruyarnthiduvome
Kurugida Maattom Kundrida Maattom
Karaiyilla Devanin Vaakku Ah.. Ah..

2. Aathi Nilai Yeguvomey
Aaseer Thirumba Peruvom
Paalaana Manmedugal Yaavum
Paaraalum Venthan Manaiyaagum
Sirai Vaazhvu Maraiyum Seer Vaazhvu Malarum
Seeyonin Magimai Thirumbum Ah.. Ah..

3. Yaakkobu Nadungiduvaano
Yaakkobin Dhevan Thunaiye
Amarikkai Vaazhvai Azhaippom
Aandavar Maarbil Sugipom
Padharaadha Vaazhvum Sidharaadha Manamum
Parisaaga Dhevanarulvaar Ah.. Ah..

4. Aaraatha kaayangal aarum
aarokiyam vaazhvinil moodum
aatriye thettrum nalnaathar
pottriye paadham panivom
anaathi devane adaikalam paarinil
anaathaiyaavathe illai Ah.. Ah..

5. Paarpottrum devan nam devan
paarinil verillai baakiyyam
neer endhan janangal endraare
verenna vazhvinil vendum
pillaigalum sabaiyum pithamunne nilaikkum
parisuttha maaligai ezhumbum Ah.. Ah..

6. Viduthalai Mulangiduvomey
Vikkinam Yaavum Agalum
Idukkangal Soolnthidum Velai
Ratchagan Meetparulvarey
Nugangal Murinthidum Kattukal Arunthidum
Viduthalai Peruvila Kanbom Ah.. Ah..

7. Thaveedin Mainthan Thalaiyavar
Thaasarin Thalaigal Vanangum
Thedidum Thaasarin Kanam
Devaathi Devanin Thiyaanam
Thalaivargal Ezhuvaar Eliyorum Uyarvaar
Paniyaalar Thirandelum Aandu Ah.. Ah

Nandri Nandri Nandri Rajah – நன்றி நன்றி நன்றி இராஜா

Nandri Nandri Nandri Rajah
நன்றி நன்றி நன்றி இராஜா
நன்றி நன்றி நன்றி தேவா (2)
உமக்கு நன்றி சொல்வதைத் தவிர
வேறே மேன்மை என் வாழ்வில் இல்லை

1. கண்ணின் மணிபோல் என்னைக் காத்தீர்
காலமெல்லலாம் நடத்துகிறீர்
உமது அன்பால் நித்தம் மகிழ்வேன்
உமது தயவால் தினமும் வாழ்வேன்

2. ஆபத்தில் என்னோடு இருப்பவர் நீரே
கேடகமாய் என்னைக் காப்பவர் நீரே
உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேனே
உம்மாலே மதிலைத் தாண்டிடுவேனே

3. அன்போடு என்னை அணைக்கின்றீரே
ஆறுதலாக தேற்றுகின்றீரே
தகப்பனை போல்
ஆற்றுகின்றீர்
தாயைப் போல் தேற்றுகின்றீர்

Neerae Indha Nagarathin – நீரே இந்த நகரத்தின் தேவன்

Neerae Indha Nagarathin
நீரே இந்த நகரத்தின் தேவன்
நீரே இந்த ஜனங்களின் இராஜா
நீரே இந்த தேசத்தின் கர்த்தர்
நீரே

நீரே இருளில் வெளிச்சம்
நீரே எங்கள் நம்பிக்கை
நீரே எங்கள் சமாதானம்
நீரே

உம்மைப்போல் ஒரு தேவன் இல்லை
உம்மைப்போல யாரும் இல்லை

பெரியக் காரியம் நடந்திடும்
ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்
இந்த தேசத்தில் – 2

நீரே இந்த நகரத்தின் தேவன்
நீரே இந்த ஜனங்களின் இராஜா
நீரே இந்த தேசத்தின் கர்த்தர்
நீரே

நீரே இருளில் வெளிச்சம்
நீரே எங்கள் நம்பிக்கை
நீரே எங்கள் சமாதானம்
நீரே

உம்மைப்போல் ஒரு தேவன் இல்லை
உம்மைப்போல யாரும் இல்லை

பெரியக் காரியம் நடந்திடும்
ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்
இந்த தேசத்தில் – 4

உம்மைப்போல் ஒரு தேவன் இல்லை
உம்மைப்போல யாரும் இல்லை

பெரியக் காரியம் நடந்திடும்
ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்
இந்த தேசத்தில்
பெரியக் காரியம் நடந்திடும்
ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்

நம்புவேன் நம்புவேன்
நம்புவேன் உம்மைத்தானே

பெரியக் காரியம் நடந்திடும்
ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்
இந்த தேசத்தில்
பெரியக் காரியம் நடந்திடும்
ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்

Neerae Indha Nagarathin Dhaevan
Neerae IndhaJanangalin Raajaa
Neerae Indha Dhaesathin Karthar
Neerae

Neerae Irulil Velicham
Neerae Engal Nambikkai
Neerae Engal Samaadhaanam
Neerae

Ummaippoal Oru Dhaevan Illai
Ummaippoala Yaarum Illai

Periya Kaariyam Nadandhidum
Oru Ezhuppudhal Seekkiram Vandhidum
Indha Dhaesathil- 2

Neerae Indha Nagarathin Dhaevan
Neerae IndhaJanangalin Raajaa
Neerae Indha Dhaesathin Karthar
Neerae

Neerae Irulil Velicham
Neerae Engal Nambikkai
Neerae Engal Samaadhaanam
Neerae

Ummaippoal Oru Dhaevan Illai
Ummaippoala Yaarum Illai

Periya Kaariyam Nadandhidum
Oru Ezhuppudhal Seekkiram Vandhidum
Indha Dhaesathil- 4

Ummaippoal Oru Dhaevan Illai
Ummaippoala Yaarum Illai

Periya Kaariyam Nadandhidum
Oru Ezhuppudhal Seekkiram Vandhidum
Indha Dhaesathil

Periya Kaariyam Nadandhidum
Oru Ezhuppudhal Seekkiram Vandhidum
Nambuvaen Nambuvaen Nambuvaen Ummaithaanae

Periya Kaariyam Nadandhidum
Oru Ezhuppudhal Seekkiram Vandhidum
Indha Dhaesathil

Periya Kaariyam Nadandhidum
Oru Ezhuppudhal Seekkiram Vandhidum