Song Category: Tamil

Anantha Thuthi Oli Ketkum – ஆனந்த துதி ஒலி கேட்கும்

Anantha Thuthi Oli Ketkum

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் – ஆ… ஆ…

1. மகிமைப் படுத்துவே னென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்று உயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிடமாட்டோம்
கறையில்லா தேவனின் வாக்கு – ஆ (2)

2. ஆதிநிலை ஏகிடுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோமே
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறைவாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் – ஆ (2)

3. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாகத் தேவன் அருள்வார் – ஆ (2)

4. ஆறாத காயங்கள் ஆறும்
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல்நாதர்
போற்றியே பாதம் பணிவோம்
அனாதி தேவனே அடைக்கலம் பாரினில்
அனாதையாவதே இல்லை – ஆ (2)

5. பார்போற்றும் தேவன் நம் தேவன்
பாரினில் வேறில்லை பாக்கியம்
நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே
வேறென்ன வாழ்வினில் வேண்டும்
பிள்ளைகளும் சபையும்
பிதாமுன்னே நிலைக்கும்
பரிசுத்த மாளிகை எழும்பும் – ஆ (2)

6. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் – ஆ (2)

7. தாவீதின் மைந்தன் தலையவர்
தாசரின் தலைகள் வணங்கும்
தேடிடும் தாசரின் கனம்
தேவாதி தேவனின் தியானம்
தலைவர்கள் எழுவார் எளியோறும் உயர்வார்
பணியாளர் திரண்டெழும் ஆண்டு – ஆ (2)

Aanandha Thuthi Oli Ketkum
Aadal Paadal Sathamum Thonikkum
Aagaya Vinmeenai Avar Janam Perugum
Aandavar Vaakku Palikkum

1. Magimaipaduthu venendraarey
Magibanin Paasam Perithey
Mangaatha Pugazhudan Vaazhvom
Maatchi Petruyarnthiduvome
Kurugida Maattom Kundrida Maattom
Karaiyilla Devanin Vaakku Ah.. Ah..

2. Aathi Nilai Yeguvomey
Aaseer Thirumba Peruvom
Paalaana Manmedugal Yaavum
Paaraalum Venthan Manaiyaagum
Sirai Vaazhvu Maraiyum Seer Vaazhvu Malarum
Seeyonin Magimai Thirumbum Ah.. Ah..

3. Yaakkobu Nadungiduvaano
Yaakkobin Dhevan Thunaiye
Amarikkai Vaazhvai Azhaippom
Aandavar Maarbil Sugipom
Padharaadha Vaazhvum Sidharaadha Manamum
Parisaaga Dhevanarulvaar Ah.. Ah..

4. Aaraatha kaayangal aarum
aarokiyam vaazhvinil moodum
aatriye thettrum nalnaathar
pottriye paadham panivom
anaathi devane adaikalam paarinil
anaathaiyaavathe illai Ah.. Ah..

5. Paarpottrum devan nam devan
paarinil verillai baakiyyam
neer endhan janangal endraare
verenna vazhvinil vendum
pillaigalum sabaiyum pithamunne nilaikkum
parisuttha maaligai ezhumbum Ah.. Ah..

6. Viduthalai Mulangiduvomey
Vikkinam Yaavum Agalum
Idukkangal Soolnthidum Velai
Ratchagan Meetparulvarey
Nugangal Murinthidum Kattukal Arunthidum
Viduthalai Peruvila Kanbom Ah.. Ah..

7. Thaveedin Mainthan Thalaiyavar
Thaasarin Thalaigal Vanangum
Thedidum Thaasarin Kanam
Devaathi Devanin Thiyaanam
Thalaivargal Ezhuvaar Eliyorum Uyarvaar
Paniyaalar Thirandelum Aandu Ah.. Ah

Nandri Nandri Nandri Rajah – நன்றி நன்றி நன்றி இராஜா

Nandri Nandri Nandri Rajah
நன்றி நன்றி நன்றி இராஜா
நன்றி நன்றி நன்றி தேவா (2)
உமக்கு நன்றி சொல்வதைத் தவிர
வேறே மேன்மை என் வாழ்வில் இல்லை

1. கண்ணின் மணிபோல் என்னைக் காத்தீர்
காலமெல்லலாம் நடத்துகிறீர்
உமது அன்பால் நித்தம் மகிழ்வேன்
உமது தயவால் தினமும் வாழ்வேன்

2. ஆபத்தில் என்னோடு இருப்பவர் நீரே
கேடகமாய் என்னைக் காப்பவர் நீரே
உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேனே
உம்மாலே மதிலைத் தாண்டிடுவேனே

3. அன்போடு என்னை அணைக்கின்றீரே
ஆறுதலாக தேற்றுகின்றீரே
தகப்பனை போல்
ஆற்றுகின்றீர்
தாயைப் போல் தேற்றுகின்றீர்

Neerae Indha Nagarathin – நீரே இந்த நகரத்தின் தேவன்

Neerae Indha Nagarathin
நீரே இந்த நகரத்தின் தேவன்
நீரே இந்த ஜனங்களின் இராஜா
நீரே இந்த தேசத்தின் கர்த்தர்
நீரே

நீரே இருளில் வெளிச்சம்
நீரே எங்கள் நம்பிக்கை
நீரே எங்கள் சமாதானம்
நீரே

உம்மைப்போல் ஒரு தேவன் இல்லை
உம்மைப்போல யாரும் இல்லை

பெரியக் காரியம் நடந்திடும்
ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்
இந்த தேசத்தில் – 2

நீரே இந்த நகரத்தின் தேவன்
நீரே இந்த ஜனங்களின் இராஜா
நீரே இந்த தேசத்தின் கர்த்தர்
நீரே

நீரே இருளில் வெளிச்சம்
நீரே எங்கள் நம்பிக்கை
நீரே எங்கள் சமாதானம்
நீரே

உம்மைப்போல் ஒரு தேவன் இல்லை
உம்மைப்போல யாரும் இல்லை

பெரியக் காரியம் நடந்திடும்
ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்
இந்த தேசத்தில் – 4

உம்மைப்போல் ஒரு தேவன் இல்லை
உம்மைப்போல யாரும் இல்லை

பெரியக் காரியம் நடந்திடும்
ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்
இந்த தேசத்தில்
பெரியக் காரியம் நடந்திடும்
ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்

நம்புவேன் நம்புவேன்
நம்புவேன் உம்மைத்தானே

பெரியக் காரியம் நடந்திடும்
ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்
இந்த தேசத்தில்
பெரியக் காரியம் நடந்திடும்
ஒரு எழுப்புதல் சீக்கிரம் வந்திடும்

Neerae Indha Nagarathin Dhaevan
Neerae IndhaJanangalin Raajaa
Neerae Indha Dhaesathin Karthar
Neerae

Neerae Irulil Velicham
Neerae Engal Nambikkai
Neerae Engal Samaadhaanam
Neerae

Ummaippoal Oru Dhaevan Illai
Ummaippoala Yaarum Illai

Periya Kaariyam Nadandhidum
Oru Ezhuppudhal Seekkiram Vandhidum
Indha Dhaesathil- 2

Neerae Indha Nagarathin Dhaevan
Neerae IndhaJanangalin Raajaa
Neerae Indha Dhaesathin Karthar
Neerae

Neerae Irulil Velicham
Neerae Engal Nambikkai
Neerae Engal Samaadhaanam
Neerae

Ummaippoal Oru Dhaevan Illai
Ummaippoala Yaarum Illai

Periya Kaariyam Nadandhidum
Oru Ezhuppudhal Seekkiram Vandhidum
Indha Dhaesathil- 4

Ummaippoal Oru Dhaevan Illai
Ummaippoala Yaarum Illai

Periya Kaariyam Nadandhidum
Oru Ezhuppudhal Seekkiram Vandhidum
Indha Dhaesathil

Periya Kaariyam Nadandhidum
Oru Ezhuppudhal Seekkiram Vandhidum
Nambuvaen Nambuvaen Nambuvaen Ummaithaanae

Periya Kaariyam Nadandhidum
Oru Ezhuppudhal Seekkiram Vandhidum
Indha Dhaesathil

Periya Kaariyam Nadandhidum
Oru Ezhuppudhal Seekkiram Vandhidum

Koo Koo Kuyilu – கூகூ கூகூ கூக்கூ

Koo Koo Kuyilu
கூகூ கூகூ

கூக்கூ என்னு குயிலு ஒன்னு பாடுது -2
அது எதுக்காக பாடுது தெரியுமா
அது ஆண்டவர் கிட்ட பேசுது தெரியுமா

மேமே மேமே மேம்மே
இன்னு ஆடு ஒன்னு பேசுது – 2
அது யாருகிட்ட பேசுது தெரியுமா
அது ஆண்டவர் கிட்ட பேசுது தெரியுமா

சின்ன சின்ன தம்பி தங்க
இயேசுவோடு பேசுவியா
இயேசுவோடு பேசுவியா – 2
பேசுறத தினமும் கேட்கிறார்
நீ பேசுவத எதிர் பார்க்கிறார் – 2

ல ல ல ல …

Vazhiyana En Devane – வழியான என் தேவனே

Vazhiyana En Devane
வழியான என் தேவனே
துணையாக வருவார் என்றும்
பெளனானவர் என் அரணானவர் (2)
என்றென்றும் எனை விட்டு விலகதவர்

1. நிழல் கூட எனை பிரியும் நேரம் உண்டு
நிலையான மலை கூட விலகுவதுண்டு – 2
அசையாத அவர் கிருபை
அழியாது அவர் மகிமை – 2

அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை (2)

2. கருவில் நான் உருவான நாள் முதலாய்
கருத்தாக எனைக் காக்கும் கர்த்தர் இவர் – 2
இருள் என்னை சூழ்ந்த போதும்
ஒளியாகி துணையானவர் – 2
அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை (2)

3. முள்ளான பாதை நான் செல்லும் போதும்
கல்வாரி அனுபவந்தான் காணும் போதும் – 2
என் இயேசு உடனிருப்பார்
என் பாரம் அவர் சுமப்பார் – 2
அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை (2)

Vaarthaiyalae Ulagai Padaithire – வார்த்தையாலே உலகைப் படைத்தீரே

Vaarthaiyalae Ulagai Padaithire
வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
உந்தனின் வார்த்தைகள்
அதிசயம் அதிசயம் – (2)
உம் வல்ல செயல்கள் ஆச்சரியமே

வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே

1. மனசு கலங்கி தவிக்கும்போது
உமது வார்த்தை போதும்
இதயம் வலியால் துடிக்கும் போதும்
உமது வார்த்தை போதும்
எமது உள்ளம் மகிழ்ச்சியாய் துள்ளும்

வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே

2. உலகம் வெறுத்து ஒதுக்கும் போது
உமது வார்த்தை போதும்
உள்ளம் கலங்கி தவிக்கும் போது
உமது வார்த்தை போதும்
எனது ஜீவன் உயிர்ப்பும் நீரே

வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே

Vidai Ariya Kaalangal – விடை அறியா காலங்கள்

Vidai Ariya Kaalangal

விடை அறியா காலங்கள்
தினம் புரியா நேரங்கள்
எந்தன் நெஞ்சின் ஆழங்கள்
தேடிப்பார்க்கிறேன்
விடை அறியா காலைகள்
தினம் புரியா கவலைகள்
வஞ்சனைகள் ஏதும் இன்றி
உண்மை சொல்கிறேன்

கைகள் கோர்த்து நடக்கும் போது
போகும் பாதை தெரியாதவன்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
உந்தன் பாசம் புரியாதவன்
கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
பாத சுவடை தெரியாதவன்
உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
தைரியங்கள் இல்லாதவன்

ஓ.. ஓ…ஓ.ஓ…ஓ…ஓ… ஓ…ஓ..ஓ..ஓ
ஓ..ஓ…பகலினில் தொலைந்தேன்
நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன்

உம் கைகள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கைகள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
உம் கரங்கள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கைகள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
போகும் தூரம் எல்லாம் அழகாகும்

கைகள் கோர்த்து நடக்கும் போது
போகும் பாதை தெரியாதவன்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
உந்தன் பாசம் புரியாதவன்
கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
பாத சுவடை தெரியாதவன்
உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
தைரியங்கள் இல்லாதவன்

உம் கைகள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கரங்கள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
இந்த உண்மை இன்று நடந்தால்
நிலமெல்லாம் நிலவாகும்
என் கைகள் நீர் பிடித்தால்
போகும் தூரம் அழகாகும்

கைகள் கோர்த்து நடக்கும் போது
எந்தன் பாதை என் இயேசு தான்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடிக்கும்
எந்தன் பாசம் என் இயேசு தான்
எந்தன் கூட நடந்து செல்லும்
பாதை சுவடும் என் இயேசு தான்
எல்லாம் தெரிந்தும் உண்மை புரிந்தும்
தைரியமே என் இயேசு தான்

ஓ.. ஓ…ஓ.ஓ…ஓ…ஓ… ஓ…ஓ..ஓ..ஓ

Vidai Ariyaa Kalangal
Thinam Puriya Nerangal
Enthan Nenjin Aazhangal
Thedipparkkiraen
Vidai Ariyaa Kaalaigal
Thinam Puriya Kavalaigal
Vanjanaikal Yethum Indri
Unmai Solgiraen

Kaigal Korthu Nadakumbodhu
Pogum Padhai Theriyathavan
Kaigal Rendum Irukipidithum
Undhan Pasam Puriyathavan
Kaigal Korthu Nadakum Undhan
Padha Suvadai Theriyathavan
Unmai Purindhum Ummai Therinthum
Thairiyangal Illadhavan

Oh ..oh.. Oh ..oh..oh ..oh..oh ..oh..
Oh ..oh.. Pagalinil Tholainthaen
Nenjil Aaa !! Iravinil Karainthaen

Um Kaigal Nan Pidithaal
Thadumaari Oosalaadum
En Kaigal Neer Pidiththaal
Vilagaamal Valuvaagum
Um Karangal Nan Pidithaal
Thadumaari Oosalaadum
En Kaigal Neer Pidiththaal
Vilagaamal Valuvaagum
Pogum Thooram Ellam Azhagaagum

Kaigal Korthu Nadakumbodhu
Pogum Padhai Theriyathavan
Kaigal Rendum Irukipidithum
Undhan Pasam Puriyathavan
Kaigal Korthu Nadakum Undhan
Padha Suvadai Theriyathavan
Ummai Purindhum Unmai Therinthum
Thairiyangal Illadhavan

Um Kaigal Nan Pidithaal
Thadumaari Oosalaadum
En Karangal Neer Pidiththaal
Vilagaamal Valuvaagum
Intha Unmai Indru Nadanthaal
Nilamellam Nilavaagum
En Kaikal Neer Pidiththaal
Pogum Thooram Azhagaagum

Kaikal Korththu Nadakkum Pothu
Enthan Paathai En Yesu Thaan
Kaikal Rendum Irukki Pidikkum
Enthan Paasam En Yesu Thaan
Enthan Kooda Nadanthu Sellum
Paathai Suvadum En Yesu Thaan
Ellam Therinthum Unmai Therinthum
Thairiyamae En Yesu Thaan

Oh ..oh.. Oh ..oh..oh ..oh..oh ..oh..

Yesu Nam Vazhkaiyil – இயேசு நம் வாழ்க்கையில்

Yesu Nam Vazhkaiyil
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் …(2)

1. இயேசு என்னோடு இருப்பார்
வெற்றி பெறுவேன்
கஷ்டங்கள் கவலைகள் இல்லை
என்றும் இல்லை
இயேசு என்னோடு இருப்பார்
நான் பெலன் அடைவேன்
அவரோடு என்றும் நானும்
பாடி மகிழ்வேன்
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்

நான் தோற்றதே இல்லை (2)
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்

இயேசு நம் வாழ்க்கையில் …(2)

2. இயேசு என்னோடு இருப்பார்
எல்லாம் முடியும்
துன்பங்கள் துயரங்கள் இல்லை
என்றும் இல்லை
இயேசு என்னோடு இருப்பார்
குறைவே இல்லை
அவரையே நம்பி இருப்பேன்
பாடி மகிழ்வேன்
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை (2)

இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்

இயேசு நம் வாழ்க்கையில் …(2)
கர்த்தர் நம்மோடு பயமே இல்லையே
கர்த்தர் நம்மோடு கண்ணீர் இல்லையே
கர்த்தர் நம்மோடு கலக்கம் இல்லையே
கர்த்தர் நம்மோடு சோர்ந்திடதே
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்

இயேசு நம் வாழ்க்கையில் …(2)

Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil

Yesu Enodu Iruppaar
Vetri Peruvaen
Kashtangal Kavalaigal Illai
Endrum Illai
Yesu Enodu Iruppaar
Naan Bhelan Adaiven
Avarodu Endrum Naanum
Paadi Magizhvaen

Avar Enakaai Ellam Seidhaar
Naan Thootradhai Illai
Avar Enakaai Ellam Seidhaar
Naan Thootradhai Illai

Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil

Yesu Enodu Iruppaar
Ellam Mudiyum
Thunbangal Thuyarangal Illai
Endrum Illai
Yesu Enodu Iruppaar
Kuraive Illai
Avaraiyai Naambi Iruppaen
Paadi Magizhvaen

Avar Enakaai Ellam Seidhaar
Naan Thootradhai Illai
Avar Enakaai Ellam Seidhaar
Naan Thootradhai Illai

Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil

Karthar Nammodu Bhayame Illaye
Karthar Nammodu Kanneer Illaye
Karthar Nammodu Kalakam Illaye
Karthar Nammodu Sorndhidadhe

Yesu Nam Vazhkaiyil
Irundhaan Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhaan Pothum
Yesu Nam Vazhkaiyil

Sthotharikkiren Naan Sthotharikkiren – ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன்

Sthotharikkiren Naan Sthotharikkiren
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் – தேவ
சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்!

1. மனுவுருவானவனை ஸ்தோத்தரிக்கிறேன் – மோட்ச
வாசலைத் திறந்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்

2. கனிவினை தீர்த்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் – யூத
காவலனை ஆவலுடன் ஸ்தோத்தரிக்கிறேன்

3. என்னை இரட்சித்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் – கிறிஸ்து
இயேசு நசராதிபனை ஸ்தோத்தரிக்கிறேன்

4. அனைமனு மைந்தனையே ஸ்தோத்தரிக்கிறேன் – மேசியாவை
மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்!

Sthotharikkiren Naan Sthotharikkiren (2) – Deva
Sundara Kiristhu Veindhai Sthotharikkiren (2)

1. Manu Ooruvaanavanai Sthotharikkiren (2) – Motcha
Vaasalai Thirandhavanai Sthotharikkiren (2)

2. Kanivinai Theerthavanai Sthotharikkiren (2) – Engal Kaavalanai Aavalodan Sthotharikkiren (2)

3. Ennai Irathchithavannai Sthotharikkiren (2) – Kristhu
Yesu Nasaraathipanai Sthotharikkiren (2)

4. Anaimanu Maindhanaiye Sthotharikkiren (2) – Varum Messiyavai Meiyaai Sthotharikkiren (2)

En Mugan Vekatpattu – என் முகம் வெட்கப்பட்டு

En Mugan Vekatpattu
என் முகம் வெட்கப்பட்டு போவதேயில்ல
ஒரு நாளும் தலைகுனிவு எனக்கு இல்ல

இல்ல இல்ல தோல்வி இல்ல
இல்ல இல்ல கலக்கம் இல்ல – என் முகம்

1. நீதிமானை சோதித்து அறிகிறீர் -என்றும்
பொன்னாக ஜொலித்திட செய்கிறீர்
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை – இல்ல இல்ல

2. என் மீட்பர் உயிரோடு இருக்கிறீர்
எனக்காக யாவையும் செய்கிறீர்
உம் முகம் பார்ப்பதினால்
நீர் எனக்குள் இருப்பதினால் – இல்ல இல்ல