Song Category: Tamil

Ennai Belapaduthum Christhu – என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து

Ennai Belapaduthum Christhu
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து இயேசுவால்
எல்லாவற்றையும் செய்வேன் (2)
எல்லாவற்றையும் செய்வேன் – நான்
எல்லாவற்றையும் செய்வேன் – (2) – என்னை

1. உன்னதரின் சமூகத்தில் காத்திருப்பேன்
உன்னதத்தின் பெலனால் நிரம்பிடுவேன் (2)
கழுகுப் போல் பெலன் கொண்டு எழும்பிடுவேன்
ஓடினாலும் நடந்தாலும் இளைப்படையேன்(2) – என்னை

2. கர்த்தருக்குள் அனுதினம் மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ச்சியாய் இருப்பதால் பெலனடைவேன்(2)
எக்காள தொனியுடன் ஆர்ப்பரிப்பேன்
எரிகோவின் கோட்டைகளை தகர்த்திடுவேன்(2) – என்னை

3. கர்த்தரின் சத்துவத்தில் பெலப்படுவேன்
சத்துருவின் சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன்(2)
பலவானை முந்தி என்றும் கட்டிடுவேன்
இயேசுவின் நாமத்தால் சுதந்தரிப்பேன்(2) – என்னை

Ennai belapaduthum Christhu Yesuvaal
Ellavattraiyum seivaen (2)
Ellavattraiyum seivaen – Naan
Ellavattraiyum seivaen (2) – Ennai

1. Unnatharin samoogathil kaathiruppaen
Unnathathin belanal nirambiduven (2)
Kaluguppol belan kondu elumbiduven
Odinaalum nadanthaalum ilaippadaiyen (2) – Ennai

2. Kartharukkul anu thinam magilnthiruppaen
Magilchiyaai iruppathaal belanadaivaen (2)
Ekkala thoniyudan aarpparippaen
Erigovin kottaigalai thagarthiduvaen (2) – Ennai

3. Kartharin sathuvathil belappaduvaen
Sathuruvin senaikkulle paainthiduvaen (2)
Balavaanai munthi enrum kattiduvaen
Yesuvin namathaal sudantharippaen (2) – Ennai

Christhuvin Anbu – கிறிஸ்துவின் அன்பு அது

Christhuvin Anbu
கிறிஸ்துவின் அன்பு அது உன்னத அன்பு
என் இயேசுவின் அன்பு இணையில்லா அன்பு (2)

1. பாவ சேற்றில் மூழ்கியே பாதை மாறினேன்
பாவி என்னை தேடியே அன்பாய் வந்தீரே (2)
இரத்தம் சிந்தி என்னையும் மீட்டு கொண்டீரே
இரட்சகரின் அன்பை எண்ணி நித்தம் பாடுவேன் (2) – கிறிஸ்துவின்

2. கஷ்டம் நஷ்டம் சோதனைகள் சூழ்ந்து வந்தது
கர்த்தர் அன்பு நித்தம் என்னை தாங்கி கொண்டது(2)
சோர்வை நீக்கும் நேசர் அன்பென்னை மூடி கொண்டது
தேற்றும் நேசரின் மார்பில் சாய்ந்து நித்தம் ஜீவிப்பேன் (2) – கிறிஸ்துவின்

3. ஆத்ம நேசர் அன்பு என்னை நெருக்கி ஏவுதே
அன்பால் நிறைந்து அவர் பணி நித்தம் செய்வேனே(2)
நேசத்தழல் என்னில் என்றும் பற்றியெரியுதே
நேசருக்காய் ஜீவன் வைத்து சேவை செய்வேனே(2) – கிறிஸ்துவின்

Christhuvin anbu athu unnatha anbu
En Yesuvin anbu inaiyilla anbu (2)

1. Pava setril moolgiyae pathai maarinaen
Paavi ennai thediyae anbaai vantheerae (2)
Rattham sindhi ennaiyum meettukondeerae
Ratchagarin anbai enni nitham paaduven (2) – Christhuvin

2. Kashtam nashtam sothanaigal soolnthu vanthathu
Karthar anbu nitham ennai thaangi kondathu (2)
Sorvai neekum nesar anbennai moodi kondathu
Thetrum nesarin maarbil saainthu nitham jeevippaen (2) – Christhuvin

3. Aathma nesar anbu ennai nerukki yevuthae
Anbal nirainthu avar pani nitham seivenae (2)
Nesa thalal ennil enrum pattri yeriuthae
Nesarukkaai jeevan vaithu sevai seivenae (2) – Christuvin

Akkiniyai Poda Vanthirae – அக்கினியை போட வந்தீரே

Akkiniyai Poda Vanthirae
அக்கினியை போட வந்தீரே
பற்றி எரிய வேண்டும் என்றீரே (2)
இயேசையா உங்க விருப்பம்
இப்போ என்னிலே நிறைவேறட்டும் (2)

அக்கினி அபிஷேக அக்கினி
இறங்கட்டும் என் மேலே
நிரப்பட்டும் இப்போதே (2)

1. மேல் வீட்டறையினிலே இறங்கின அக்கினி
எங்கள் மத்தியிலே இப்போ இறங்கட்டுமே
அக்கினி நாவுகள் அமரட்டும் இப்போது
பற்பல பாஷைகளை பேசிட செய்யட்டுமே (2) – அக்கினி

2. என்னை கேட்டருளும் என்று எலியா ஜெபித்த போது
இறங்கின அக்கினி இப்போ என்மேல் இறங்கட்டுமே
அவியாத அக்கினி எரியட்டும் உள்ளங்களில்
எழுந்து ஜூவாலிக்கவே இப்போ எண்ணை ஊற்றிடுமே (2) -அக்கினி

3. சீனாய் மலையினிலே இறங்கின அக்கினி
சீயோன் சபைதனிலே இறங்கட்டும் இப்போதே
அக்கினி புகைக்கடாய் நிரம்பட்டும் இப்போதே
மலைமேல் பட்டணமாய் ஒளிரச் செய்யட்டுமே (2) – அக்கினி

Akkiniyai Poda Vanthirae
Patri eriya vendum endreerae (2)
Yesaiya unga viruppam
Ippo ennilae niraiverattum (2)

Akkini abishega akkini
Irangattum en melae
Nirappattum ippothae (2)

1. Mael veettaraiyinilae irangina akkini
Engal mathiyilae ippo irangattumae
Akkini naavugal amarattum ippothu
Parpala bashaigalai pesida seiyattumae (2) – Akkini

2. Ennai kaettarulum entru eliya jebithapothu
Irangina akkini ippo enmael irangattumae
Aviyatha akkini eriyattum ullangalil
Elunthu juvalikkavae ippo ennai ootridumae (2) – Akkini

3. Sinaai malayinilae irangina akkini
Seeyon sabaithanilae irangattum ippothae
Akkini puhaikkaadaai nirambattum ippothae
Malaimel pattanamai olira seiyattumae (2) – Akkini

Ummai Potri Paaduven – உம்மை போற்றி பாடுவேன்

Ummai Potri Paaduven
உம்மை போற்றி பாடுவேன்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
உம்மை வாழ்த்தி பாடுவேன் – இயேசையா(2)
ஓ…ஓ….. ஓசன்னா (4) – (2)

1. பூமியின் குடிகளே
கர்த்தரை பாடுங்கள்
கெம்பீரமாகவே
உயர்த்தியே பாடுங்கள் (2) – ஓ….ஓ…

2. கர்த்தரின் மந்தையே
அவர் சத்தத்தை கேளுங்கள்
ஆனந்த சத்தமாய்
அவர் பாதம் பணியுங்கள் (2) – ஓ….ஓ…

3. அவர் வாசலில் துதியுடன்
ஆடிப்பாடியே செல்லுவோம்
கர்த்தர் பெரியவர்
எல்லா துதிக்கும் பாத்திரர்(2) – ஓ…ஓ…

4. (நம்) தேவன் நல்லவர்
மாறா கிருபையுள்ளவர்
அவர் உண்மையுள்ளவர்
தலைமுறைக்கும் இரங்குவார்(2) – ஓ…ஓ…

Ummai Potri Paaduven
Ummai pugalnthu paduven
Ummmai vaalthi paaduven – Yesaiyaa (2)

Oh..oh..Osanna (4) – (2)

1. Poomiyin Kudigalae
Kartharai paadungal
Kembiramagavae
Uyarthiyae paadungal (2) – Oh..oh..

2. Kartharin Manthaiyae
Avar sathathai kaelungal
Aanantha sathamai
Avar paatham paniyungal (2) – Oh..oh..

3. Avar vaasalil thuthiyudan
Aadippaadiyae selluvom
Karthar periyavar
Ella thuthikkum paathirar (2) – Oh..oh..

4. (Nam) Devan nallavar
Maarah kirubai ullavar
Avar unmai ullavar
Thalai muraikkum iranguvaar (2) – Oh..oh..

Thiruchabaiyae Elumbidu – திருச்சபையே எழும்பிடு

Thiruchabaiyae Elumbidu
திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்
(நேசர்) இயேசுவின் உத்தமியே
உன் மேன்மையை அறிந்துக்கொள் (2)

1. உலகம் தோன்றும் முன்னே
முன் குறித்தார் உன்னையே (2)
ஜீவனை கிரயமாய்
ஈந்துனை கொண்டாரே (2) – திருச்சபையே

2. என் சபையை கட்டுவேன்
அது கிறிஸ்துவின் வாக்கல்லோ (2)
பாதாள வாசல்கள் உன்னை
மேற்கொள்ள முடியாதே (2) – திருச்சபையே

3.ஆவியானவர் என்றுமே
உன்னுடன் இருக்கின்றார் (2)
அவர் அபிஷேகம் உன்னையே
தினம் தழைக்க செய்யுமே (2) – திருச்சபையே

4. உன் நடுவில் மணவாளன்
என்றென்றும் உலாவுவார் (2)
உன் அழகில் பிரியமாய்
தினம் மகிழ்ந்து பூரிப்பார் (2) – திருச்சபையே

5. எக்காள தொனியுடன்
உன்னை சேர்த்திட வருவாரே (2)
ஆட்டுக்குட்டியின் மணநாளில்
மணவாட்டி நீ மகிழ்வாயே (2) – திருச்சபையே

Thiruchabaiyae Elumbidu
Un vallamaiyai tharithukol
(Nesar) Yesuvin uthamiyae
Un menmayai arinthukol (2)

1.Ulagam thonrumunne
Mun kurithaar unnaiyae
Jeevanai kirayamai
Yeenthunai kondarae (2) – Thiruchabaiyae

2.En sabaiyai kattuven
Athu Kiristhuvin vakkallo
Pathala vasalgal unnai
Maerkolla mudiyathe (2) – Thiruchabaiyae

3. Aaviyanavar enrume
Unnudane irukkintar
Avar abishegam unnaiyae
Thinam thalaikka Seiyumae (2) – Thiruchabaiyae

4. Un naduvil manavalan
Enrendrum ulaavuvaar
Un alagil piriyamai
Thinam magilnthu poorippaar (2) – Thiruchabaiyae

5. Ekkala thoniyudan
Unnai saerthida varuvare
Aattukuttiyin mananalil
Manavatti nee magilvayae (2) – Thiruchabaiyae

En Aathuma Ummai Nokki – என் ஆத்துமா உம்மை நோக்கி

En Aathuma Ummai Nokki
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)

அசைவுற விடமாட்டீர் – 2
(என்னை)

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே

என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்

En Aathuma Ummai Nokki Amarnthirukum
Nan nambuvathu ummale aagum – 2

Kanmalaye adaikalame
En belane ennai meetavare (Kaapavare) 2
Asaivuravidamaateer-2

Yekkalathilum ummai nambiduven
En idhayathai ummidam ootriduven
Asaivuravidamaateer-2

Kirubaium magimaiyum nirainthavare
Samayathil thakka balan alipavare
Asaivuravidamaateer-2
En aathuma ummai nambi ilaipaaridum
Nan nambuvathu ummale aagum – 2

Unnadharum Sarva Vallavarum – உன்னதரும் சர்வ வல்லவரும்

Unnadharum Sarva Vallavarum
உன்னதரும் சர்வ வல்லவரும்
எந்தனை மறைத்திடும் நிழலுமவர்
கர்த்தரும் அடைக்கலமும் கோட்டையும் 
என் தேவனும் நான் என்றும் நம்புகிறவர் (2)

சிறகாலே என்னை மூடிடுவார்  
செட்டையாலே அடைக்கலம் தருவார் 
அவரே எந்தன் கூடாரமே 
இந்த இயேசு எந்தன் தாபரமே 

ஹா ஹா ஹா ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே 

நா நா நா நல்லவர் நீர் 
நல்லவர் நீர்  இயேசுவே 

ஹா ஹா ஹா அல்லேலுயா 
அல்லேலுயா ஆமென் (2)

கூப்பிடும் போதும் என் ஆபத்திலும் 
என்னோடு இருந்து தப்புவிப்பவர் 
நீடித்த நாட்களாய் திருப்தியாக்கி 
இரட்சிப்பை எனக்கு காண்பிப்பவர் (2)

சிறகாலே என்னை மூடிடுவார்  
செட்டையாலே அடைக்கலம் தருவார் 
அவரே எந்தன் கூடாரமே 

இந்த இயேசு எந்தன் தாபரமே 

ஹா ஹா ஹா ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே 
ந ந ந நல்லவர் நீர் 
நல்லவர் நீர்  இயேசுவே 

ஹா ஹா ஹா அல்லேலுயா 
அல்லேலுயா ஆமென் (2)

Unnadharum Sarva Vallavarum
Endhanai Maraithidum Nizhalumavar

Kartharum Adaikkalamum Koattaiyum
En Devanum Nan Endrum Nambugiravar

Siragaale Ennai Moodiduvaar
Settaiyaale Adaikkalam Tharuvaar
Avare Endhan Koodaarame
Indha Yesu Endhan Thaabarame

Ah Ah Ah Aaradhanai
Aaradhanai Umake

Na Na Na Nallavar Neer
Nallavar Neer Yesuve

Ah Ah Ah Alleluyah
Alleluyah Amen

Kooppidumbodhum En Aabathilum
Ennodu Irundhu Thappuvippavar

Needitha Naatkalai Thirupthiyaaki
Ratchippai Enakku Kaanbippavar

En Devanae En Rajanae – என் தேவனே என் ராஜனே

En Devanae En Rajanae

என் தேவனே என் ராஜனே
என் உள்ளம் தேற்றிடுமே – 2

நன்மை செய்யும் நல்லவர் நீரல்லவோ
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்

எனக்காக சிலுவையில் மரித்தீரையா
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்

வாழவைக்கும் தெய்வம் நீர்தானய்யா
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்

பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
பாவி என்னையும் நீதிமானாய் மாற்றினீரே

​துதிக்கின்றேன் இயேசைய்யா 4
​நன்மை செய்தீரே என் வாழ்விலே 4
​வாழ்வு கொடுத்தீரே வாழ வைத்தீரே 4
​தேற்றினீரே என் உள்ளத்தை

காளைதோறும் புதுகிருபை தருபவரே
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்

வாக்குதத்தம் செய்தவர் நீர்தானய்யா
வாக்குமாறாமல் நிறைவேற்றி முடிப்பவரே

உண்மையுள்ள தெய்வம் நீர்தானய்யா
கண்கலங்காமல் வழிநடத்தி சென்றிடுவீர்

என் தெய்வமே என் இயேசுவே
என் உள்ளம் தேற்றினீரே

Itho Sagalamum Pudhidhagudhae – இதோ சகலமும் புதிதாகுதே

Itho Sagalamum Pudhidhagudhae
இதோ சகலமும் புதிதாகுதே
இப்பொழுதே தோன்றுதே

வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திரவெளியில் ஆறுகளையும்
உண்டாக்கும் தேவன் நீரல்லவோ
உருவாக்கும் தேவன் நீரல்லவோ

நீரே – ( 4 )

இந்த ஜனத்தை எனக்கென்று
தெரிந்துகொண்டு ஏற்படுத்தினேன்
அழைத்த தேவன் நீரல்லவோ
துதி சொல்ல வைப்பவர் நீரல்லவோ

நீரே – ( 4 )

தெரிந்து கொண்ட ஜனத்திற்கு
தாகந்தீர்க்க தண்ணீரையும்
கொடுக்கும் தேவன் நீரல்லவோ
கனம்பண்ணும் தேவன் நீரல்லவோ

நீரே – ( 4 )

Bethlahamil Pirinthavar Yesuvallo – பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ

Bethlahamil Pirinthavar Yesuvallo

பல்லவி
பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ தேவன்
பெத்லேகேமில் பிறந்தவர் இவரல்லோ இராஜன்-2

சரணங்கள்

1. மனுக்குலத்தின் பாவம் போக்க மாசற்ற ஜோதியாய்
விண்ணிலிருந்து மண்ணில் வந்தார் தேவ மைந்தனாய் -2
ஆலோசனை கர்த்தராம் அதிசயமானவர்
நித்திய பிதாவாம் சமாதான காரணர் -2

2. மாட்டுத்தொழுவம் தெரிந்தெடுத்தார் மன்னவராம் இயேசுவே
மாந்தரெல்லாம் தாழ்மையின் சின்னமாய் வாழவே -2
மாறாத நேசராம் மகிமைக்குப் பாத்திரர்
மன்னாதி மன்னராம் மாட்சிமை நிறைந்தவர் -2

3. பூவுலகில் வந்துதித்தார் புண்ணியராம் இயேசுவே
பூமியிலே சந்தோஷம் சமாதானம் பிரியமே -2
பரலோக தேவனாம் பாவிகளின் இரட்சகர்
பரிசுத்த இராஜனாம் பாரினில் உயர்ந்தவர் -2