Song Tags: Tamil Christmas Dance Song

Poorana Alagullavare – பூரண அழகுள்ளவரே

Poorana Alagullavare

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே

அனுபல்லவி
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்

சரணங்கள்
1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே – போற்றுவேன்

2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே – போற்றுவேன்

3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் – போற்றுவேன்

Mesiyaa Thaan Porandhaachu – மேசியா தான் பொறந்தாச்சு

Mesiyaa Thaan Porandhaachu
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)

ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)

1. பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே
பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே (2)
தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே
தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -2
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)

2. பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம்
பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் (2)
பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மக்கள் அழியாமல்
பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம்
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம் -2

மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)

ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)

Aathi Pitha Kumaran – ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு

Aathi Pitha Kumaran
பல்லவி
ஆதி பிதா குமாரன் – ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.

அனுபல்லவி

நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி

சரணங்கள்
எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி

நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி