Ananthamai Inba Kanaan
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் – 2
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்.. ஆனந்தமாய்
1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்
கண்டு நன்றியுடன் பாடிடுவேன்.. ஆனந்தமாய்
2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்.. ஆனந்தமாய்
3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லால் ஆசை இப்பூவில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே.. ஆனந்தமாய்
4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
உம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்
தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
கண் பாரும் என்றும் நான் உம் அடிமை.. ஆனந்தமாய்
5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
ஆற்றிடுதே உந்தன் சமூகமே
பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன்.. ஆனந்தமாய்
Aananthamaai Inba Kaanaan Yekiduven
Thooya Pithaavin Mukam Tharisippen – 2
Naalukku Naal Arputhamaay Ennaith Thaankidum
Naathan yesu Ennodiruppaar.. Aananthamaai
1. Settrininrennaith Thookkiyeduththu
Maattri Ullam Puthithaakkinaare
Kallaana En Ullam Urukkina Kalvaariyai
Kandu Nandriyudan Paadiduven.. Aananthamaai
2. Vaaliba Naalil yesuvaik Kanden
Vaanjaiyudan Ennaith thedi Vanthaar
Etharkume Uthavaa Ennaiyum Kandeduththaar
yesuvin Anbai Naan En Solluven.. Aananthamaai
3. Karththarin Siththam Seythita Niththam
Thaththam Seithe Ennai Arppaniththen
yesu Allaal Aasai Ippoovil Vere Illai
Endrum Enakkavar Aatharave.. Aananthamaai
4. Ummaip Pin Sendru oozhiyam Seithu
Um Paatham Sera Vaanjikkiren
Thaarum Thevaa yezhaikkum Maaraatha Um Kirupai
Kanpaarum Endrum Naan Um Adimai.. Aananthamaai
5. Thettriduthe Um Vaakkukal Ennai
Aattriduthe Unthan Samookame
Pelaththin Mel Pelanadainthu Naan Seruven
Perinba Seeyonil Vaazhnthiduven.. Aananthamaai