En Meetpar Kiristu Piranthar – என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்

En Meetpar Kiristu

என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் இயேசு உதித்தார்
எனக்கென்ன பேரின்பம்

சரணங்கள்
பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் ஜோதி
நரர் வாழ்ந்திடவே பெரும் நீதி
நீர் வாரும் மெய் ஜோதி – என்

1. உந்தன் மகிமையை என்றென்றும் சொல்வேன்
உந்தன் கிருபையின் மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதின்றே
பரலோக வாழ்வின்றே – என்

2. ஆ! அல்லேலூயா துதி பாடு
இன்று அமலன் பிறந்தார் பாரு
மோட்ச வாசலை திறந்தார் பாரு
எந் நாளும் புகழ் பாடு – என்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *