Ezhumbi Vaa Nee
எழும்பி வா நீ
என் பிரியமே என் ரூபவதியே
சாம்பலை சிங்காரமாக்கி
புலம்பலை ஆனந்தமாக்குவேன்
1. உடைந்து போன கனவால் உந்தன்
வாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?)
விழுந்துபோன தருணங்கள் நினைத்து
நம்பிக்கை இழந்தாயோ?
பருவங்கள் மாற்றுவேன்
உன்னை நேர்த்தியாய் காட்டுவேன்
கனி தரும் விருட்சமாய்
உன்னை விருத்தியாக்குவேன்
2. சிறகையிழந்த கழுகைப்போல
உன் மனம் கலங்குதோ?
சிதறிப்போன சிலரை நினைத்து
சிதைந்து நீ போனாயோ?
சிறுமை பொறுத்தால்
புது சிறகுகள் பார்ப்பாய்
சிறகை விரித்தால்
பெரும் சிகரங்கள் காண்பாய்
Ezhumbi Vaa Nee
En Priyamae en Roobavathiye
Sambalai Singaaramaaki
pulambalai Aanandhamaakkuvean
1. Udainthu pona kanavaal unthan
vazhkkaiye kasakkutho? (Kasanthatho?)
Vizhnthupona tharunangal ninaiththu
nambikkai Izhanthaayo?
Paruvangal Maatruvean
Unnai Nerththiyai Kaatuvean
kani tharum virutchamaai
unnai viruththiyaakkuvaen
2. Siragai izhantha kazhugaipola
Un manam Kalangutho?
sitharipona silarai Ninaiththu
sithainthu nee ponayoo?
Sirumai poruththaal
puthu sirakugal paarppai
siragai viriththaal
perum sigarangal Kaanbaai