Imaipoluthum Ennai
இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
ஒரு நாளும் விட்டு விலகமாட்டார்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
நீரே என் அடைக்கலம்
என் கோட்டை என் கேடகம்
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன் (2)
வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர் (2)
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனே
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீரண்டையில் என்னை
கொண்டு போய்விடுகிறீர்
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம் உந்தன் கையில்
பயமில்லை பயமில்லை என் வாழ்க்கை உந்தன் கையில்
என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
நீண்ட ஆயுள் தந்து காப்பீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர் (2)
என் குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே