Karam Pidithu Unnai Yendrum
கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை என்றும் காத்திடுவார் – 2
கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே – 2
1. படுகுழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார் – 2
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – 2 (…கலங்கிடாதே)
2. ஆறுகளை நீ கடந்தாலும்
அவைகள் என்றும் உன் மீது புரள்வதில்லை – 2
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – 2 (…கலங்கிடாதே)
3. சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்
அவர் கிருபை உன்னை என்றும் தாங்கிடுமே – 2
சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
சோர்ந்திடாதே உன்னை அவர் அணைப்பாரே – 2 (…கலங்கிடாதே)
Karam Pidiththu Unnai Endrum Nadaththiduvaar
Kanmani Pol Unnai Endrum Kaaththiduvaar – 2
Kalangidaathe Thigaiththidaathe
Karththar Karam Unakku Undu Bayanthidaathe – 2
1. Padukuzhiyil Nee Vizhunthaalum
Paraththilirunthu Vanthu Unnai Thookkiduvaar – 2
Akkiniyil Nee Nadanththaalum
Edhuvum Unnai Sethappaduththa Mudiyaathe – 2 (…Kalangidaathe)
2. Aarugalai Nee Kadanthaalum
Avaigal Endrum Un Meethu Puralvathillai – 2
Kaarirulil Nee Nadanthaalum
Paathaikku Velichchamaaga Iruppaare – 2 (…Kalangidaathe)
3. Suzhal Kaattru Unnai Soozhnthaalum
Avar Kirubai Unnai Endrum Thaangidume – 2
Sothanaiyil Nee Amizhnthaalum
Sornthidaathe Unnai Avar Anaippaare – 2 (…Kalangidaathe)
அற்புதமான வாக்குத்தத்தங்கள் நிறைந்த பாடல்…. இனிய ராகம்….வல்லமை நிறைந்த அபிஷேகம்….